வெட்கக்கேடு... தமிழக அரசு இதில்தான் முதலிடமா...? டுவிட்டரில் தெறிக்கவிடும் ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Jul 10, 2019, 2:04 PM IST
Highlights

மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை அணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நேற்று கேள்வி நேரத்தில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில் தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993-ம் ஆண்டு முதல் 15 மாநிலங்களில் மொத்தம் 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 144 பேரும், குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?

— P. Chidambaram (@PChidambaram_IN)
 

இந்நிலையில், இதுதொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மனித கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என கேட்டு உள்ளார். உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!