இனி நம்ம கிராமசாலைகள் பளபளனு மின்னப்போகுது... ரூ.1200 கோடி ஒதுக்கி எடப்பாடி அதிரடி..!

Published : Jul 10, 2019, 01:05 PM IST
இனி நம்ம கிராமசாலைகள் பளபளனு மின்னப்போகுது... ரூ.1200 கோடி ஒதுக்கி எடப்பாடி அதிரடி..!

சுருக்கம்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியது. முதலில் கேள்வி நேரம் நடைபெற்றது. இதையடுத்து சமூக நலம், சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் புதிதாக மூன்று சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.9.58 கோடி ஒதுக்கப்படும். இந்த கல்லூரிகள் வரும் 2019-20 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

 

ரூ.318 கோடி செலவில் 10,000 தடுப்பணைகள், ரூ.1,200 கோடி மதிப்பில் ஊரக சீரமைப்பு போன்றவை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.  ஏற்கனவே இருக்கும் சட்டக் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதற்கான சேர்க்கை நடைபெற்று, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!