
தன்னை மனிதாபிமானம் இல்லாதவர் என்று யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் தெருப் பொறுக்கிகள் என பாஜக தேசிய செயலாளர் எச்,ராஜா கடுமையாக தெரிவித்துள்ளார்.
கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநருடன் என்ன பேசினேன் என்று வெளியில் சொல்லமுடியாது என்றார்.
நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விஷால் விவகாரத்தில் சட்டப்படியே அரசின் அனைத்து துறைகளும் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கந்துவட்டி கொடுமையை ஒழிக்க சட்டம் போட்டதோடு சரி என்றும் ஆனால் அந்த சட்டத்தை அதிமுக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என எச்.ராஜா குற்றம்சாட்டினார்..
மெர்சல் திரைப்பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த விஜய்க்கு தானும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் , மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆன்மீகத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியுமே தவிர நாத்திகத்தால் எதிர்கொள்ள முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
என்னை ஆண்ட்டி ஹ்யூமன் என்று விமர்சனம் செய்பவர்கள் அறிவில்லாத தெருப்பொறுக்கிகள் என அவர் கடுமையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் 2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டிக்கு எதிரான சட்டத்தை செயல்படுத்த கோரியும் இசக்கிமுத்து கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் பாஜக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற பட்டிருப்பதாகவும் எச்.ராஜா தெரிவித்தார்.