விவிபாட் ஒப்புகைச் சீட்டுகள் எப்படி எண்ணப்படும்... வாக்குச்சாவடி மையங்கள் எப்படி தேர்வு செய்யப்படும்?

By Asianet TamilFirst Published May 23, 2019, 5:52 AM IST
Highlights

நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் இந்தக் குலுக்கல் நடைபெறும். 

வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே எண்ணப்பட உள்ளன. விவிபாட் ஒப்புகைச் சீட்டுகள் எப்படி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் வழிகாட்டியுள்ளது.


இதன்படி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் இந்தக் குலுக்கல் நடைபெறும். 5 வாக்குச்சாவடி மையங்கள் எவை என்பது குறித்து குலுக்கலில்  தேர்வான வாக்குச்சாவடியை வேட்பாளர்களுக்கும் கட்சியின் முகவர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக உடனே தெரிவிக்கப்படும்.
குலுக்கலுக்கு அஞ்சல் அட்டை அளவில் உள்ள வெள்ளை நிற அட்டைகளே பயன்படுத்தப்படும். ஒரு தொகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளனவோ, அதே அளவுக்கு அட்டைகளில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். அந்த அட்டையில் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தொகுதியின் பெயர். வாக்குப்பதிவான நாள், வாக்குச்சாவடி மையத்தின் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
காகித அட்டை 4 மடிப்புகளாக மடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். விவரங்கள் யாருக்கும் தெரியாதபடியே அது இருக்கும். ஒரு பெட்டியை நன்றாகக் குலுக்கி அதிலிருந்து 5 அட்டைகள் தேர்வு செய்யப்படும். குலுக்களில் தேர்வாகும் வாக்குச்சாவடியின் ஓப்புகைச் சூட்டுகள் எண்ணப்படும். 

click me!