காரைக்குடியில் பூட்டிய ரேசன் கடை ஊழியர் பாலு சிக்கியது எப்படி? சுற்றி வளைத்து பிடித்த அதிகாரிகள்.!

By T BalamurukanFirst Published May 16, 2020, 12:19 AM IST
Highlights

சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குனராக திருமாவளவன்  வந்த பிறகு இதுபோன்ற கடத்தல்கள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம்.காரைக்குடி கீழத்தெரு பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.


சிவகங்கை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ)மூலம் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய பொருள்கள் வெளிமார்கெட்டில் விற்பனை செய்ததாக சிவகங்கை திமுக நகர்செயலாளர் துரை.ஆனந்த் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி பகுதியில் அம்மா கூட்டுறவு அங்காடியில் ரேசன் அரிசியை பட்டை தீட்டி விற்பனை செய்து வந்ததை காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன் கண்டுபிடித்து புகார் செய்து வந்தார். இந்த நிலையில் காரைக்குடியில் பூட்டிக்கிடந்த ரேசன் கடையின் சாவியை அக்கடையின் பொறுப்பாளர் பாலு காணாமல் போய் விட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்து மாட்டிக்கொண்டார்.
இந்த பாலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. ஏற்கனவே மதுரையில் இருந்து வந்த துணை பதிவாளர் ஒருவருக்கு ஆல்இன்ஆளாக இருந்து செயல்பட்டவராம்.அந்த அதிகாரி இருக்கும் போது பாலு நிழல் அதிகாரியாகவே செயல்பட்டார் என்றும் பாம்கோ வட்டாரத்தில் விசாரித்த போது அதிகாரிகள் குமுறுகிறார்கள்.


இந்த நிலையில் காரைக்குடி பாம்கோ- கடை -3 இருந்து பொருள்களை கடை பொறுப்பாளர் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

 இதன்பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து, காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி குடிமைப்பொருள் தாசில்தார் அந்தோணி ராஜ் ஆகியோர் அந்த ரேசன் கடையில் திடீர் சோதனை நடத்த சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த கடையின் பொறுப்பாளர் பாலு, ரேசன் கடையை பூட்டி விட்டு தலைமறைவானார். அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு நேற்று முன்தினம் சீல் வைத்தனர். அதன் பின்னர் நள்ளிரவு நேரத்தில் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் சீல் வைக்கப்பட்ட ரேசன் கடையின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அகற்றிவிட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அவரை பிடித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குனராக திருமாவளவன்  வந்த பிறகு இதுபோன்ற கடத்தல்கள் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

click me!