குடிமகன்கள் உற்சாகம் நாளை டாஸ்மாக் ஓப்பன். கலர் டோக்கன் ரெடி. குஷியில் தமிழக அரசு.! குமுறும் பெண்கள்.!!

By T BalamurukanFirst Published May 15, 2020, 10:12 PM IST
Highlights

குடிமகன்கள் ஆதர்அட்டை கொண்டு வரவேண்டாம். ஏழு நாளும் ஏழு வண்ணங்கள் வழங்க வேண்டும்.அதை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
 


தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் ஏழு வண்ணங்களில் குடிமகன்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன் அடிப்படையிலேயே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் 144தடை உத்தரவு இன்னும் நீக்கப்படவில்லை.கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மது குடித்தால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறை என்று மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில்  தமிழக அரசு அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு பெற்று மதுக்கடைகளை திறந்தது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை டாஸ்மாக் கடைகள் கடைப்பிடிக்கவில்லை என்று அதற்கான வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து டாஸ்மாக் கடைகள் திறக்க தடை உத்தரவு பெற்றார் வழக்கறிஞர் ராஸேஷ். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த மனுமீதான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சில நிபந்தனைகளோடு டாஸ்மாக் கடை திறக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தடைக்கு தடை போட்டது உச்சநீதிமன்றம்.குடிமகன்கள் ஆதர்அட்டை கொண்டு வரவேண்டாம். ஏழு நாளும் ஏழு வண்ணங்கள் வழங்க வேண்டும்.அதை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்படும் நேரத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடாதவண்ணம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கிலும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
 

click me!