எத்தனை சீட் உங்களுக்கு வேணும்? எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி...!

By Selva KathirFirst Published Sep 18, 2020, 9:54 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் இருந்து திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் எத்தனை சீட் எதிர்பார்ப்பீர்கள் என்று முன்னாள் அமைச்சரும் மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமுமான எ.வ.வேலு தேமுதிக இளைஞர் அணிச்செயலாளர் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் எத்தனை சீட் எதிர்பார்ப்பீர்கள் என்று முன்னாள் அமைச்சரும் மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமுமான எ.வ.வேலு தேமுதிக இளைஞர் அணிச்செயலாளர் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தேமுதிக தனது கட்சியின் துவக்க விழாவை வெகு விமர்சையாக கொண்டாடியது. அப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர். அதிலும் அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் இந்த முறை வாழ்த்து சற்று அதிகமாகவே இருந்ததாக சொல்கிறார்கள். அந்த வகையில் திமுக பெரும்புள்ளி எவ வேலு கடந்த வாரம் எல்.கே.சுதீஷை தொடர்பு கொண்டு கட்சி நிறுவன நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் அடிக்கடி உங்கள் தலைவரை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

எ.வ.வேலு மற்றும் சுதீஷ் கட்சியை கடந்து நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பல முறை திமுக கூட்டணி தொடர்பாக இருவரும் சந்தித்து ஏற்கனவே பேசியுள்ளனர். ஆனால் அப்போதைய அரசியல் சூழலால் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் போய்விட்டது. ஆனால் இம்முறை எப்படியாவது தேமுதிகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று எவ வேலு தீர்க்கமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால் மு.க.ஸ்டாலினும் தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டும் என்று இந்த முறை மிகவும் ஆசைப்படுகிறார் என்கிறார்கள்.

வலுவான கூட்டணி என்பதை போல எதிர் முகாம் வலுவற்ற கூட்டணியாக இருக்க வேண்டும் என்கிற வியூகத்தின் அடிப்படையில் பாமக, தேமுதிகவை திமுக எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். இந்த இரண்டில் பாமகவை கூட வழிக்கு கொண்டு வந்துவிடலாம், ஆனால் தேமுதிகவை கொண்டு வர முடியாது. இதனால் தேர்தலுக்கு ஆறுமாதத்திற்கு முன்பே கூட்டணிப்பேச்சை திமுக தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். தனது நீண்ட நாள் பழக்கத்தின் அடிப்படையில் உரிமையுடனேயே சுதீசிடம் தேமுதிகவின் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டுள்ளார் எ.வ.வேலு என்கிறார்கள்.

 

ஆனால் சுதீஷோ வழக்கம் போல் எதற்கும் பிடி கொடுக்காமல் பேசியதாக சொல்கிறார்கள். நாம் பிடி கொடுக்காமல் இருந்தால் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கலாம் என்பது தான் அவரது கணக்கு என்கிறார்கள். ஆனால் திமுக தரப்பில் 15 தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு கொடுக்க தயராக உள்ளதாக சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியிலும் கூட இதே எண்ணிக்கையில் தான் தேமுதிகவி,ற்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. என்பதால் திமுக 15 தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு ஒதுக்க முன் வரும் என்கிறார்கள். இதற்கு தேமுதிக உடன்படவில்லை என்றால் 20 தொகுதிகள் வரை அதிகரிக்கப்படலாம் என்கிறார்கள்.

அதற்கு மேல் தேமுதிக எதிர்பார்த்தால் இந்த முறையும் கூட்டணி வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். சுதீஷ் – எவ வேலு பேச்சின் சாராம்சம் இதுவாகவே இருந்தாலும் சுதீஷ் எதையும் வெளிப்படையாக கூறவில்லை என்கிறார்கள்.ஆனால் எவ வேலு 15 தொகுதிகள் பிளஸ் விட்டமின் ப என்று வழக்கம் போல் அதிரடியாக பேசியதாக கூறுகிறார்கள். ஆனால் இதில் முடிவெடுக்க வேண்டியது அக்கா தான் என்பதால் அவரிடம் பேசிவிட்டு அடுத்து சந்திப்போதும் என்று எவ வேலுவிடம் கூறிவிட்டு போனை கட் செய்தாராம் சுதீஷ்.

click me!