அடேங்கப்பா... உள்ளாட்சி தேர்தலில் இப்படியெல்லாமா நடந்தது..? வியந்து போன மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Jan 3, 2020, 4:54 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் எத்தனையோ சுவாரஷ்யமான விஷயங்கள் நடந்தேறியுள்ளதாக தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் வியப்படைந்துள்ளார். 
 

இதுகுறித்து அவர், ‘’இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மாவட்டங்கள் வாரியாக முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியின் மீது எந்த அளவுக்கு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதற்குச் சில உதாரணங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்துள்ளார். மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ நாகராஜின் மனைவி தோல்வியைத் தழுவியுள்ளார். மண்ணச்சநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ.பரமேஸ்வரியின் கணவர் தோற்றுள்ளார். சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரனின் மகன் தோற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு, அது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கும் ஆளும்கட்சி மீது மக்களுக்கு உள்ள கோபத்தின் வெளிப்பாடே.

இதிலிருந்து ஆளும்கட்சியினர் பாடம் கற்பார்களா? என்பது சந்தேகம்தான். ஆனால், அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் இது. இந்தத் தேர்தலில் சில நம்பிக்கை நிறைந்த காட்சிகளும் இருந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவரும், வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியான பெண் ஒருவர், தான் வேலை பார்த்த ஊராட்சிக்கே தலைவி ஆனது மக்களாட்சியின் மாண்புக்கு உதாரணம் ஆகும். திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா பெற்றுள்ள வெற்றி, விளிம்பு நிலை மக்கள் அதிகாரம் பெறத் தொடங்கியதன் அடையாளம்’’என அவர் வியப்பை வெளிப்படுத்தி உள்ளார். 

click me!