சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் சிக்கியது எப்படி.? அம்பலப்படுத்தும் ஹரி நாடாரின் மலேசிய மனைவி.!

Published : Jan 21, 2022, 10:01 PM IST
சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் சிக்கியது எப்படி.? அம்பலப்படுத்தும் ஹரி நாடாரின் மலேசிய மனைவி.!

சுருக்கம்

விஜயலட்சுமிக்கு தங்க இடம் இல்லை; வீடு இல்லை. அவருக்கு என் கணவர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார். மனிதாபிமானத்தில் 50 ஆயிரம் வழங்கி அடைக்கலம் கொடுத்தார். அங்கேயும் வந்து தகராறு செய்துவிட்டுதான் விஜயலட்சுமி சென்றார்.

சீமான் தப்பு செய்தாரா, விஜயலட்சுமி தப்பு செய்தாரா என்று எனக்கு தெரியாது. இப்போது என் கணவர் சட்டத்தின் பிடியில் உள்ளார். சீமானை கைது செய்யவில்லை.  விஜயலட்சுமியை கைது செய்யவில்லை. இப்போது என் கணவரைத்தான் கைது செய்துள்ளார்கள் என்று ஹரி நாடாரின் மனைவி என்று கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்பவர் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - விஜயலட்சுமி இடையேயான மோதல் பிரசித்திப் பெற்றது. இவர்களுடைய பிரச்னையில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் தலையிடப் போக, அவர் மீது விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். அந்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சீமான் - விஜயலட்சுமி - ஹரி நாடார் விஷயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி ஹரி நாடாரின் மனைவி என்று கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த தொழிலபதிபர் மஞ்சு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு: 

இப்போ நடிகை விஜயலட்சுமி ஹரி நாடார் மீது ஒரு புகார் கொடுத்திருக்காங்க. எனக்கு சீமானை தெரியாது. அவரை நான் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். தாய் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். ஒரு தாயைப் பற்றி தவறாகப் பேசினால் யாரும் பொறுக்காது. சீமானின் தாயார் பற்றி விஜயலட்சுமி அதிகமாகப் பேசுகிறார் என்று ஹரி நாடாரிட நான் சொன்னேன். ஒரு நல்ல எண்ணத்தில் நான் சொல்லித்தான் விஜயலட்சுமிக்கு எதிராக அந்தப் பதிவை அவர் (ஹரி நாடார்) போட்டார். ஆனால், விஜயலட்சுமி நாக்கை வெட்டுவேன் என்று சொல்லுங்கள் என்று நான் சொல்ல சொல்லவில்லை. உணர்ச்சிவசப்பட்டு அவரேதான் சொன்னார். நாக்கை வெட்டுவேன் என்பது கோபத்தில் பேசிய வார்த்தைதான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

சீமானுக்கும் ஹரி நாடாருக்கும் ஒரு நல்ல நட்பு தொடக்கத்திலிருந்தே உண்டு. அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். இருவருக்கும் நீண்ட நாட்களாக நல்ல பழக்கம். இருவரும் நல்ல மதிப்பு, மரியாதையோடு நல்லப்படியாக பேசுவார்கள். விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் பேசியதில் யார் மீது தவறு என்பதை இருவரையும் உட்கார வைத்து பேசினால்தான் தெரியும். விஜயலட்சுமிக்கு தங்க இடம் இல்லை; வீடு இல்லை. அவருக்கு என் கணவர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார். மருத்துமவனைக்கு சென்றவந்த பிறகு எனக்கு தங்க வீடு இல்லை என்று விஜயலட்சுமி சொன்னார். ஒரு பெண் தங்க வீடு இல்லை என்றபோது, என் கணவர் மனிதாபிமானத்தில் 50 ஆயிரம் வழங்கி அடைக்கலம் கொடுத்தார். அங்கேயும் வந்து தகராறு செய்துவிட்டுதான் விஜயலட்சுமி சென்றார். பணத்தை நேரடியாக விஜயலட்சுமிக்குக் கொடுக்கவில்லை. வாடகை வீட்டுக்கு அட்வான்ஸாக அந்தப் பணத்தைக் கொடுத்தார். 

சீமான் - விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் தலையிட வேறு ஏதும் காரணம் கிடையாது. சீமான் தப்பு செய்தாரா, விஜயலட்சுமி தப்பு செய்தாரா என்று எனக்கு தெரியாது. இப்போது என் கணவர் சட்டத்தின் பிடியில் உள்ளார். சீமானை கைது செய்யவில்லை. விஜயலட்சுமியை கைது செய்யவில்லை. இப்போது என் கணவரைத்தான் கைது செய்துள்ளார்கள். இது எனக்கு உண்மையிலேயே சோகமான நேரம். பெங்களூரு சிறையில் 8 மாதங்களாக சிறையில் இருக்கிறார் ஹரி நாடார். ஜாமினுக்காகப் போராடிகொண்டிருக்கிறோம். எமஷோனலா நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கணவரைப் பற்றி மனைவிக்குத்தானே தெரியும். எனக்கு சீமானைத்  தெரியாது. ஆனால், அவருடைய பேச்சுகளைப் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் நான் பேசவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை” என்று மஞ்சு தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!