எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல் இவர்களால் எப்படி ஒரு மகா கேவலத்தை செய்யமுடிகிறது? நார் நாறாய் கிழிக்கும் திமுகவினர்...

First Published May 8, 2018, 1:41 PM IST
Highlights
How can these people be able to do nothing without any guilt


சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து அடிக்கல் நாட்டினர்.  இந்த நினைவிடம், ஃபீனிக்ஸ் பறவை போன்ற வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. அதன் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த நினைவு மண்டபம், 50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், திமுக தொண்டர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இது ஏதோ அரசியலுக்கா சொல்வதாக தோன்றவில்லை.. ஏனெனில் அம்மையார் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தியவர் .. அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோதும் சரி .. நல்ல நிலையில் மிக கடுமையாக அரசியல் செய்தபோதும் கூட நாகரீகமாக செயல்பட்டவர்.. ஆனால் நிரூபிக்க குற்றவாளிக்கு அரசே விழா எடுப்பதும் அவரின் படத்தை சட்டமன்றத்தில் திறப்பதும் அவருக்கு நினைவிடம் அமைப்பதும்  ஏந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல் இவர்களால் எப்படி செய்யமுடிகிறது..

ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிட்ட தான்தோன்றித்தனமாக செயல்பட்ட ஒருவர்.. தான் செய்த தவறை மறைக்க மீண்டும் மீண்டும் தப்பை செய்தவர் .. நீதிமன்றம் சட்டப்படி தண்டித்த போதும்.. நேர்மையாக வாதிட்டு தான் நிரபாராதியென வெளியே வர முயற்சிக்காமல் குமாரசாமியை பயன்படுத்தி... அனைத்து விதிமீறல்களையும் கையிலெடுத்து மீண்டும் அதிகாரத்திற்கு வந்தவர்... உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை தன் இனத்தின் செல்வாக்கை வைத்து காலதாமதப்படுத்தியவர்.. இந்திய நீதிக்கு மட்டுமல்ல இயற்கை நீதிக்கும் எதிரானவர் ஜெயலலிதா.

இந்த சல்லிகள் சேர்ந்து அடித்த கொள்ளை காத்துக்கொள்ள எதையாவது தாங்கி நிற்கவேண்டுமென்று அதற்கு காரணத்தை தேடுகிறார்கள்... அதனால் தான் ஜெயலலிதாவை புனிதராக சித்தரித்தால் நாள் நம்மை யாரும் கொள்ளைக்காரனென்று குற்றவாளியென்று சொல்ல தயங்குவார்கள்.. தண்டிக்கபட்ட குற்றவாளிக்கே அரசு செலவில் விழா மணிமணிடபம் என்றால் யாரேனும் நம்ம் கேள்வி கேட்க முடியுமா என்ன..

இதில் கேவலம் என்னவென்றால் நீதிமன்றமே இதை கண்டுக்கொள்ளவில்லை.. அல்லது மௌனம் காக்கிறது.. மரபை மீறிய செயலென்றோ , சட்டரீதியாக தவறென்றோ சொல்ல தயங்குகிறது நீதித்துறையில் நம்பிக்கையை சாகடிக்கிற சிலர் தங்கள் இனத்தவரை காத்திட எதுவரை வேண்டுமானாலும் வளைத்தொடித்து நீதியை தங்களுக்கான நீதியாய் ஆக்குவதை தொடர்ந்து செய்கிறார்கள்..

உலகிலேயே குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் .. வெகுமக்கள் நிச்சயமாக இந்த இழிசெயலை விரும்பவில்லை .. உயிரோடு இருந்திருந்திரால் சசிகலாவோடு ஜெயில் இருந்து சாப்பிங் சென்று பரபரப்பை ஏற்படுத்தியிருப்பார்.. ₹100 கோடிக்காக அவரது இல்லமும் சொத்தும் அரசு ஏலம் விட பட்டிருக்கும்..
இந்திய அரசியலில் கொள்ளையடித்து சிறைச்சென்ற முதல் முதல்லரென்று அடைமொழியோடு வரலாற்றில் அழைக்கபட வேண்டியவரை..

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் நீங்காத கறையை ஏற்படுத்தியவரை மக்கள் பணத்தை திட்டம் போட்டு திருடிய திருடியை அதிகாரம் இருக்கிறதென்பதற்காக.. அரசு விழாயெடுத்து கொண்டாடுவதென்பது மகா கேவலம்..
நினைவு மண்டப வாயிலில்..

ஊழலுக்காக சிறைத்தண்டனை பெற்ற பட்டாம்பூச்சி என எழுதி வையுங்கள் .. ஏனெனில் தன்னை சட்டமன்றத்திலேயே பாப்பாத்தி என்று இருமாப்போடு சொன்னவர்..எங்கள் கிராமங்களில் பாப்பாத்திகளை.. பட்டாம்பூச்சி என்றும் அழைப்பர் அழிக்கமுடியாத கறை.. என பதிவிட்டுள்ளனர்.

click me!