
சாதாரண மருத்துவராக ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பணியை தொடங்கிய கீதா லட்சுமி, மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக உயர்ந்தது எப்படி என்று? விலாவாரியாக சிலர் எழுதிய கடிதமே, வருமான வரி துறையின் துருப்பு சீட்டாக பயன்பட்டிருக்கிறது.
ஸ்டான்லி மருத்துவ மனையில் சாதாரண மருத்துவராக பணியை தொடங்கிய கீதா லட்சுமி, சில பிரிவுகளில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க பாட்டு புடவைகளை லஞ்சமாக வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரின் அறிமுகம் அவருக்கு கிடைத்து, அதன்மூலம் அமைச்சரின் நட்பு கிடைத்து, மருத்துவ கல்வி இயக்குனராக உயர்ந்துள்ளார்.
மருத்துவ பணி, பணி மாறுதலுக்கு பத்து லட்சம் கமிஷன் என, ஆயிரக்கணக்கில் அவரால் பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவரிடமிருந்துதான் அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பணம் சென்றுள்ளது.
அதற்காக, சென்னை, மதுரை, விழுப்புரம் ஆகிய இடங்களில் மருத்துவர்களின் நெட் ஒர்க் மூலம் இதை தெளிவாக செய்து வந்திருக்கிறார் அவர். அந்த மருத்துவர்களின் பெயர்களும் அந்த கடிதத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில், மருத்துவக்கல்லூரி இயக்குநராக இருந்து கீதா லட்சுமி ஓய்வு பெற்றுள்ளார் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த நாளே, அவர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தப்பணியில் இருந்து கொண்டு, எம்.எஸ்., எம்.டி. படிக்கும் என முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக, சிலரிடம் தலா இருபது லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார்.
சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும், வீடுகள், மனைகள் , எஸ்டேட்டுகள், ஹோட்டல்கள் என பலவற்றில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அனைத்தும், நேர்மையான சில அதிகாரிகளின் மூலம், தகுந்த ஆதாரங்களுடன், வருமானவரி அதிகாரிகளுக்கு சென்று சேர்ந்ததால், அவர்களின் வேலை எளிதாகி விட்டது.
அப்படியும், விசாரணைக்கு வராமல் தப்பிக்கும் வகையில், நீதி மன்றத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு எதுவும் பலிக்கவில்லை. இப்போது வசமாக சிக்கி இருக்கிறார்.
இதைவிட பெரிய கூத்து, கீதாலட்சுமியின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, மருத்துவத்துறையின் மிக உயரிய விருதான பி.சி.ராய் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.