
குடிநீர் திட்டத்திற்கு கூடுதலாக 1௦௦ கோடி ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடை காலத்தில் அதிக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குடிநீர் தேவைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு கூடுதலாக ரூ.4௦ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.35 கோடி, தமிழ்நாடு குடிநீர் வாரியத்துக்கு ரூ.25 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
மேலும்,ஏப்ரல்,மே மாதங்களில் கால்நடை தீவனத் தேவைக்கு ரூ.2௦ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வறட்சி நிவாரணம் குடிநீர் திட்ட பணிகளை கள ஆய்வு செய்யவும், குடிநீர் தரத்தை உறுதி செய்த பின்னரே மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்