​இணைவி, மனைவி, துணைவிணு வாழ்ந்தவரோட கட்சிகாரனுக்கு ஆத்தாவின் மதிப்பு எப்படி தெரியும்... ஆ.ராசாவுக்கு பதிலடி.!

By Thiraviaraj RMFirst Published Dec 6, 2020, 4:00 PM IST
Highlights

இணைவி, மனைவி, துணைவி என வாழ்ந்தவரோட கட்சிகாரனுக்கு ஆத்தான்ற வார்த்தைக்கு மதிப்பு எப்படி தெரியும்  என ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுகவை சேர்ந்த விந்தியா.
 

இணைவி, மனைவி, துணைவி என வாழ்ந்தவரோட கட்சிகாரனுக்கு ஆத்தான்ற வார்த்தைக்கு மதிப்பு எப்படி தெரியும்  என ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுகவை சேர்ந்த விந்தியா.

உங்காத்தா ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி என ஜெயலலிதா என தரக்குறைவாக பேசிய திமுகவை சேர்ந்த ஆ.ராசாவுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் அதிமுகவை சேர்ந்த விந்தியா. 

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ’’திமுக தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது தெரிவிக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது. ரூ.1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் ரூ. 1.76 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தார்கள். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போது இந்த ஊழல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியே இதில் நடவடிக்கை எடுத்தது. இவர்கள் தற்போது அ.தி.மு.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்’’ என குற்றம் சுமத்தினார். 

இந்த பேச்சை தொடர்ந்து அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ’’ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் குறிப்பிட்டிருப்பதாக அவரது கட்சியினர் திமுக மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க அவர் தயாரா? ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா.

 இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, ‘’நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகி விட்டது. இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு இது அழகா? உங்காத்தா (ஜெயலலிதா) ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னேன். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. 

கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்ககவே சசிகலாவை, சுதாகரனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புதிய புதிய கம்பெனிகளை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் ஜெயலலிதா இருந்தது அசிங்கம் என நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதற்கு என்ன பதில்? என நான் கேட்டேன். அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கிக் கொண்டு திரிகிறாயே..? அப்படியானால் ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன்... ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன் என்று அர்த்தமா?’’என ஆ.ராசா பேசினார்.

அவரது பேச்சு அதிமுகவினரை ஆத்திரப்படுத்தியது. என்னதான் இருந்தாலும் ஆளும் கட்சி முதல்வரை ஒருமையிலும், மறைந்த முன்னள் முதல்வரை, மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவியை ஆ.ராஜா கடுமையான சொற்களை கொண்டு, கொள்ளைக்காரி, உங்காத்தா என்றெல்லாம் கொச்சையான வார்த்தைகளைப்பயன்படுத்தி பேசியிருப்பது எந்த வகையில் நியாயம்? என பல அரசியல் கட்சியினரும் கொதிப்படைந்தனர்.  

​இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அதிமுகவை சேர்ந்த நடிகை விந்தியா, ‘’சாமியிக்கூட ஆத்தானு சொல்லிதான் பழக்கம். நாங்க எங்க ஆத்தாவின் படத்தையும் கொள்கையும் தூக்கிட்டுதான் சுத்தறோம். ஆனால், உங்களைமாதிரி உங்க தாத்தாவின் பிணத்தை தூக்கிட்டு பொதைக்க வழி இல்லாமல் அலையவில்லை. இணைவி, மனைவி, துணைவி என வாழ்ந்தவரோட கட்சிகாரனுக்கு ஆத்தான்ற வார்த்தைக்கு மதிப்பு எப்படி தெரியும் !' என நெத்தியடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!