ரஜினிகாந்த் பாஜகவின் முகமே... அச்சுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கிறார்.. திருமாவளவன் அதிரடி..!

Published : Dec 06, 2020, 01:15 PM IST
ரஜினிகாந்த் பாஜகவின் முகமே... அச்சுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கிறார்.. திருமாவளவன் அதிரடி..!

சுருக்கம்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். ரஜினி பாஜகவின் முகமே. உடல்நிலை சரியில்லை என கூறியவர் கட்சி தொடங்கியது அச்சுறுத்தல் காரணமாகத்தான். 

பாஜக, ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த்  கட்சி தொடங்குகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார். 

காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். ரஜினி பாஜகவின் முகமே. உடல்நிலை சரியில்லை என கூறியவர் கட்சி தொடங்கியது அச்சுறுத்தல் காரணமாகத்தான். 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த நியமித்திருக்கிறார். துணைவேந்தர் சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை என்றும் கூறினார்.

மேலும், வரும் 8ம் தேதி பாரத் பந்த் நடைபெறுகிறது., இந்த பந்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!