சாலையோரம் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடு !! சட்டப் பேரவையில் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jul 10, 2019, 7:33 AM IST
Highlights

சாலையோரம் குடிசைகளில் வசிக்கும், ஏழை மக்களுக்கு, படிப்படியாக நிரந்தர வீடுகள் கட்டி தரப்படும் என, துணை முதல்வர், பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக  எம்எல்ஏ  பி.கே.சேகர்பாபு: சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு, வீடு கட்டி தர வேண்டும் என, 2016ல் இருந்து, சட்ட சபையில் பேசி வருகிறேன். 

ஒவ்வொரு முறையும், அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளிக்கிறார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. சாலையோரம் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு, வீடு ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , ஜெயலலிதா வெளியிட்ட, 'தொலை நோக்கு திட்டம் - 2023'ன்படி, குடிசைகளில் வசிக்கும், 15 லட்சம் குடும்பங்களுக்கு, வீடு கட்டித்தர திட்டமிடப்பட்டது.

இதற்கு தேவையான, 75 ஆயிரம் கோடி ரூபாயை, பல்வேறு திட்டங்களின் கீழ், திரட்ட முடிவு செய்யப்பட்டது. குடிசைகள் இல்லாத கிராமம் மற்றும் நகரம் உருவாக வேண்டும் என்பதே, ஜெயலலிதாவின் கனவு திட்டம். 

அதை நிறைவேற்ற, 400 சதுர அடி வீடுகள் உடைய, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறோம். இதுவரை, ஆறு லட்சம் வீடுகளை கட்டி, ஏழை மக்களுக்கு வழங்கி உள்ளோம். சாலையோரம் வசிப்போருக்கும், வீடுகள் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் படிப்படியாக, வீடு கட்டி தரப்படும் என தெரிவித்தார்.

click me!