
பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ‘‘மீண்டும் ஒரு எழுச்சி மூலம் மற்றொரு அன்னா ஹசாரே உருவாக மாட்டார் என நம்புவதாக எச்சரிக்கை விடுத்தார்.
பொதுக்கூட்டம்
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பங்கேற்றார். பின்னர் அன்னா ஹசாரே இயகத்தில் இருந்து விலகி ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கிய அவர், டெல்லி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் ஆக்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அன்னா ஹசாரே பேசியதாவது:-
விவசாயிகள் போராட்டம்
வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பெரிய போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வர மறுத்து விட்டது. அதனை தொடர்ந்து வந்த மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஜன்லோக்பால் மசோதாவை நீர்த்து போகச் செய்துவிட்டது.
மற்றொரு கெஜ்ரிவால்
காங்கிரசும், ப.ஜனதாவும் இரு குற்றவாளிகள். மோடி, ராகுல் இல்லாத ஒரு அரசு வேண்டும். முதலாளித்துவ அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை.
விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம். மீண்டும் ஒரு எழுச்சி மூலம் மற்றொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்’‘.
இவ்வாறு அவர் கூறினார்.