கொஞ்ச நாளைக்குத்தான் யூனியன் பிரதேசம்... இயல்பு நிலை திரும்பியதும் காஷ்மீர் மாநிலமாயிடும்... இது அமித்ஷாவின் உறுதி!

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 6:37 AM IST
Highlights

காஷ்மீரைப் பிரிக்கக் கூடாது என்றும் 370 சட்டப் பிரிவை நீக்கக் கூடாது என்றும் இக்கட்சிகள் போர்க்கொடித் தூக்கியுள்ளன. இந்நிலையில் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருப்பது தற்காலிக ஏற்பாடு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த பதற்ற நிலைக்குக் காரணம் என்னவென்பது நேற்று தெரிய வந்தது. கடந்த 71 ஆண்டுகளாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு செய்து மாநிலங்களவையில் அதிரடியாக அறிவித்தது. மேலும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்து சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரையும், லடாக் பகுதியை சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்திருப்பதை காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன. காஷ்மீரைப் பிரிக்கக் கூடாது என்றும் 370 சட்டப் பிரிவை நீக்கக் கூடாது என்றும் இக்கட்சிகள் போர்க்கொடித் தூக்கியுள்ளன. இந்நிலையில் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருப்பது தற்காலிக ஏற்பாடு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமித்ஷா பேசும்போது, “காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசம் என்பது தற்காலிகமானதே” என்று தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

click me!