வேலூரையும் அடிச்சித் தூக்கும் திமுக... வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்!

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 5:48 AM IST
Highlights

ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுக கூட்டணியே வென்றது. இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலில் தந்தி தொலைக்காட்சி நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பணப் பட்டுவாடாவால் ரத்து செய்யப்பட்ட வேலூரில், ஆகஸ்ட் 5-ல் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 28 பேர் களத்தில் இருந்தனர். வேலூரில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். முதல் கட்டமாக 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சதவீதத்தில் சற்று மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 9 அன்று எண்ணப்பட உள்ளன.
  இந்நிலையில் தந்தி  தொலைக்காட்சியில் வேலூரில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பானது. இந்தக் கருத்துக்கணிப்பில் திமுகவின் கதிர் ஆனந்த் 46 - 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 41 - 47 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள தீபலட்சுமி 4 - 7 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 48 - 52 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 44 - 50 சதவீத வாக்குகளும், மற்றவர்களுக்கு 2 - 5 சதவீத வாக்குகளு கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் பிந்தையக் கருத்துக்கணிப்பில் அது குறைந்துள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுக கூட்டணியே வென்றது. இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

click me!