பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... ஜூன் 9 முதல் ஆன்லைன் பிரசாரத்தில் குதிக்கிறார் அமித் ஷா..!

By Asianet TamilFirst Published Jun 2, 2020, 8:36 PM IST
Highlights

 பீகாரில் பாஜக தேர்தல் பிரசார பணியைத் தொடர்ந்து முடுக்கிவிட்டுவருகிறது. எனவே, கொரோனா பீதி இருந்தாலும் பீகாரில் தேர்தல் நடத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பீகார் மாநில மேலிடப் பொறுப்பாளர் கூறுகையில், “பீகாரில் தேர்தல் பிரசார கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்த மாட்டோம். அதற்குப் பதிலாக தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.
 

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஜூன் 9-ம் தேதி முதல் ஆன்லைன் பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொள்ள உள்ளார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் நவம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தல் அட்டவணைப்படி அக்டோபர்,  நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஆனால், பீகாரில் பாஜக தேர்தல் பிரசார பணியைத் தொடர்ந்து முடுக்கிவிட்டுவருகிறது. எனவே, கொரோனா பீதி இருந்தாலும் பீகாரில் தேர்தல் நடத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பீகார் மாநில மேலிடப் பொறுப்பாளர் கூறுகையில், “பீகாரில் தேர்தல் பிரசார கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்த மாட்டோம். அதற்குப் பதிலாக தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பீகாரில் ஆன்லைன் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மத்திய உள்துறை  அமைச்சருமான அமித் ஷா, வரும் 9-ம் தேதி முதல் ஃபேஸ்புக் மூலம் பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் ஒரு லட்சம் மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமும் உரையாற்ற உள்ளார். 243 தொகுதிகளில் உள்ள மக்களிடமும் உரையாற்றும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதை பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்சுவால் தெரிவித்துள்ளார். “இது பாஜகவின் தேர்தல் பிரசாரத் தொடக்கமாக இருக்கும்” என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

click me!