வேலூர் இப்ராஹிம் மீது அவரது மனைவி பயங்கர புகார்.. கல்யாண ராமனை போல கணவனை கைது செய்ய சொல்லி கதறல்.

Published : Oct 27, 2021, 10:58 AM ISTUpdated : Oct 27, 2021, 11:41 AM IST
வேலூர் இப்ராஹிம் மீது அவரது மனைவி பயங்கர புகார்.. கல்யாண ராமனை போல கணவனை கைது செய்ய சொல்லி கதறல்.

சுருக்கம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார் வேலூர் இப்ராஹிம், இவரது மனைவி சர்தாஜ் பேகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலாளராக உள்ளார்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவதூராக பேசிவரும் வேலூர் இப்ராஹிம் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது  மனைவி  சர்தாஜ் பேகம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.தொடர்ந்து வேலூர் இப்ராஹிம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார் வேலூர் இப்ராஹிம், இவரது மனைவி சர்தாஜ் பேகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் சர்தாஜ் பேகம் தனது கணவர் வேலூர் இப்ராஹிமுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அதற்கு எதிராக பேசி வருகிறார். 

அவரது பேச்சுக்கள் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. அது சாதி மோதலை உண்டுபண்ணும் வகையில் அமைந்துள்ளதால், பாரதிய ஜனதா கட்சியின் கல்யாணராமனை கைது செய்தது போல இப்ராஹிமையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சர்தாஜ் பேகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்து சமூகத்துக்குமான தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அவரை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து இப்ராஹிம் பேசியுள்ளார். தொல். திருமாவளவன் திருநங்கைகளுடன் கூட ஒப்பிட முடியாதவர் என்றும், வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

அப்படி என்றால் திருநங்கைகள் என்ன இழிவானவர்களா? திருநங்கைகளையும், திருமாவளவனையும் இப்ராகிம் இழிவு செய்துள்ளார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளது, அவர் எனது கணவர்தான், அவர் எனக்கும் அநீதி செய்திருக்கிறார், எனக்கு முத்தலாக் கூறி விட்டு சென்ற வேலூர் இப்ராஹிம் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!