பெரியார் சர்ச்சை..! ஆதரவுக் கரம் நீட்டும் இந்துக்கள்..! ஆன்மிக அரசியலை துவக்கினார் ரஜினி..!

By Selva KathirFirst Published Jan 23, 2020, 10:44 AM IST
Highlights

துக்ளக் இதழை சோ எப்படி நடத்தினார், அவர் எந்த அளவிற்கு துணிச்சல் மிக்கவர் என்பதை தெரிவிக்கும் பொருட்டே 1971ல் சேலம் திராவிடர் கழக பேரணி விஷயத்தை குறிப்பிட்டு பேசினார் ரஜினி. அந்த பேரணியில் பெரியார் உள்ளிட்டோர் ராமன் – சீதை சிலைகளை நிர்வாணமாக எடுத்துச் சென்றதை எந்த பத்திரிகையும் செய்தியாக்காத நிலையில் சோ மட்டுமே அதை  செய்தியாக்கியதாகவும், ஆனால் அந்த பத்திரிகைகளில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரஜினி கூறினார்.

துக்ளக் விழாவில் எதேச்சையாக பேசிய பேச்சுகள் ரஜினி கூறியபடி அவரது ஆன்மிக அரசியலுக்கு துவக்கமாக அமைந்துவிட்டது என்பது தான் தற்போது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

துக்ளக் இதழை சோ எப்படி நடத்தினார், அவர் எந்த அளவிற்கு துணிச்சல் மிக்கவர் என்பதை தெரிவிக்கும் பொருட்டே 1971ல் சேலம் திராவிடர் கழக பேரணி விஷயத்தை குறிப்பிட்டு பேசினார் ரஜினி. அந்த பேரணியில் பெரியார் உள்ளிட்டோர் ராமன் – சீதை சிலைகளை நிர்வாணமாக எடுத்துச் சென்றதை எந்த பத்திரிகையும் செய்தியாக்காத நிலையில் சோ மட்டுமே அதை  செய்தியாக்கியதாகவும், ஆனால் அந்த பத்திரிகைகளில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரஜினி கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட துக்ளக் பத்திரிகை பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் ரஜினி தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர். தீவிர திமுக அனுதாபியும் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவருமான சுப.வீரபாண்டியன். 1971ம் ஆண்டு பேரணியில் ராமன் – சீதை சிலைகள் நிர்வாணமாக எடுத்துவரப்படவில்லை என்று கூறியதுடன் அதற்கு சில உதாரணங்களையும் கூறினார். இதனை தொடர்ந்து ரஜினிக்கு எதிராக பெரியாரிய இயக்கங்கள் வரிந்து கட்டின.

காவல் நிலையங்களில் புகார், ரஜினி வீடு முற்றுகை என்று போராட்டம் தீவிரம் அடைந்து கொண்டிருந்த நிலையில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்கப்போவதாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும், தான் பேசியது உண்மை என்றும் கூறி பிரச்சனையின் தீவிரத்தை அதிகமாக்கினார் ரஜினி. துக்ளக் விழாவில் பேசியதை விட, ரஜினி அளித்த பேட்டி பெரியார் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.

இந்த சூழலில் தான் ரஜினிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஆதரவு வர ஆரம்பித்தது. இந்து மத கடவுள்கள் குறித்து அநாகரீகமாக பேசும் திராவிடர் கழகத்திற்கு எதிராக ரஜினி பேசியது இந்து மதப்பற்றாளர்களை உற்சாகம் அடைய வைத்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் பெரியாராவது மயிராவது என்கிற ஹேஸ்டேக் டிரண்டானது. அதே போல் ஐ ஸ்டேன்ட் வித் ரஜினி என்கிற ஹேஸ்டேக்கும், மன்னிப்பு கேட்க முடியாது என்கிற ஹேஸ்டேக்கும் வைரல் ஆனது.

இப்படி வைரல் செய்தது யார் என்று பார்த்தால் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் இல்லை. தீவிர இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் கடவுள் ஏற்பாளர்கள் என்று தெரியவந்தது. அதோடு எப்போதும் ரஜினி எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்ட சுப்ரமணியசுவாமி கூட ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். உடனடியாக ரஜினியும் சுப்ரமணியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். இப்படி பல இடங்களில் இருந்தும் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவு வந்து கொண்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக ரஜினிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. இங்கு தான் தமிழக அரசியலில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு திமுக, அதிமுக எந்த விஷயத்திலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டது இல்லை. ஆனால் பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் ஒரே புள்ளியில் இணைந்தன. இங்கு தான் ரஜினி Vs திராவிட இயக்கங்கள் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதாவது ரஜினி தான் கூறிய ஆன்மிக அரசியலை துவக்கியுள்ளார்.

click me!