கூட்டணி குறித்த அடாவடி பேச்சு..! கொதித்து எழுந்த எடப்பாடியார்..! 8 மணி நேரத்தில் பம்மிய அமைச்சர் பாஸ்கரன்..!

By Selva KathirFirst Published Jan 23, 2020, 10:28 AM IST
Highlights

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது தான், பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதை மக்கள் விரும்பவில்லை, சிறுபான்மையினர் அதிமுகவை புறக்கணித்துவிட்டனர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதிமுகவில் உள்ள சிறுபான்மையின தலைவர்கள் எடப்பாடியாரை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பேசினர்.

சிவகங்கை மாவட்டம் இளையாண்குடியில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை எப்படி கழட்டிவிடுவது என யோசித்துக் கொண்டிருப்பதாக பேசிய பேச்சு எடப்பாடியாரை டென்சனில் கொதிக்க வைத்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது தான், பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதை மக்கள் விரும்பவில்லை, சிறுபான்மையினர் அதிமுகவை புறக்கணித்துவிட்டனர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதிமுகவில் உள்ள சிறுபான்மையின தலைவர்கள் எடப்பாடியாரை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பேசினர்.

இதற்கிடையே பாஜக கூட்டணிக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூட்டணி குறித்து வெளிப்படையாக அதிமுகவினர் யாரும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டணி குறித்து அதிமுகவினல் வெளிப்படையாக பேசாமல் இருந்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து வேதனையுடன் பேசினார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காதது குறித்தும் அங்காலாய்த்தார்.

அப்போது பேச்சோடு பேச்சாக, பாஜக கூட்டணியில் இருந்த விலக அதிமுக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக பாஸ்கரன் கூறிவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சு தான் விஸ்வருபம் எடுத்துவிட்டது. அதிமுகவினரின் மனநிலையை அமைச்சர் பாஸ்கரன் வெளிப்படுத்திவிட்டதாக பலரும் பாராட்ட ஆரம்பித்தனர். ஆனால் கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று கூறியும் அமைச்சர் பாஸ்கரன் பேசியது எடப்பாடியாரை கொதிக்க வைத்தது.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி குறித்து பாஸ்கரன் பேசியது அவரது சொந்த கருத்து என்று கூறினார். அதே சமயம் அடுத்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், அதிமுக இன்னும் பாஜகவுடன் கூட்டணியில் தான் உள்ளது. தங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று பல்டி அடித்தார். சொல்லப்போனால் பம்மிவிட்டார் என்றே கூறலாம். காரணம் எடப்பாடி தரப்பிடம் இருந்து வந்த எச்சரிக்கை தான் என்று பேசிக் கொள்கிறார்கள்.

click me!