"திமுகவுக்கு போதை தலைக்கேறிவிட்டது.. இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்" -குமுறுகிறார் ஹெச்.ராஜா

Asianet News Tamil  
Published : Apr 22, 2017, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
"திமுகவுக்கு போதை தலைக்கேறிவிட்டது.. இந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்" -குமுறுகிறார் ஹெச்.ராஜா

சுருக்கம்

hindus should not vote dmk says h raja

சொரணை உள்ள இந்துக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹெச்.ராஜா பேட்டியளித்தார். சசிகலா தொடங்கி பன்னீர்செல்வம் வரை பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகக் கடுமையாகச் சாடினார். அவரது பேச்சு உள்ளபடியே "NEWSFAST" பதிவு செய்கிறது.

"தமிழகத்தில் மதச்சார்பின்மை என்ற பேச்சே பித்தலாட்டமானது. இந்துக்கள் என்று கூறி திமுகவுக்கு யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.

எனவே சொரணை உள்ள எந்த இந்துவும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம். பகுத்தறிவு பகுத்தறிவு என தமிழர்களை முட்டாளாக்கிவிட்டு இந்து கடவுள்களின் சிலையை உடைத்த திமுக மதச்சார்பற்ற கட்சியில்லை. திமுகவுக்கு போதை தலைக்கேறிவிட்டது. திமுக இப்போது எதிர்க்கட்சியாக இருக்கலாம்.

ஆனால் இதேநிலை தொடராது... விரைவில் மாற்றம் வரும்.. மணிப்பூரில் 2 சதவீதத்தில் இருந்த பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல் தமிழகத்திலும் நிலைமை மாறும்" இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!