இந்துக்களுக்கு உங்கள் உதவி வேண்டாம்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இயக்குனர் பேரரசு சவுக்கடி பதில்..

Published : Mar 15, 2021, 10:51 AM IST
இந்துக்களுக்கு உங்கள் உதவி வேண்டாம்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இயக்குனர் பேரரசு சவுக்கடி பதில்..

சுருக்கம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள  அரசியல் கட்சிகள் தீவிரங்காட்டி வருகின்றன. தேர்தலில் மக்களை கவரும் வகையில் இலவச அறிவிப்புகளையும் கவர்ச்சிகர திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. 

நீங்கள் இந்துக்களுக்கு யாத்திரை செல்ல  நிதி உதவி அளிக்க வேண்டாம், இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்களை உங்கள் கூட்டணியில் இருந்து தூக்கியெறியுங்கள் போதும் என இயக்குனர் பேரரசு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள  அரசியல் கட்சிகள் தீவிரங்காட்டி வருகின்றன. தேர்தலில் மக்களை கவரும் வகையில் இலவச அறிவிப்புகளையும் கவர்ச்சிகர திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிந்துக்களின் புனித யாத்திரை செல்ல நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது இந்துக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், இதற்கு  திரை இயக்குனர் பேரரசு ஹிந்துக்களுக்கு உதவி வேண்டாம் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கு, தங்கள் தேர்தல் அறிக்கையில் ஹிந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிப்பதாய் கூறியிருந்தீர்கள் மகிழ்ச்சி! ஆனால் ஹிந்துக்களுக்கு அந்த உதவி வேண்டாம். அதற்கு பதிலாக வேறொரு உதவி செய்யுங்கள். ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கும்படி பேசுபவர்களை கிட்டே சேர்க்காதீர்கள், ஹிந்துமதத்தை இழிவாய் பேசுபவர்களோடு கூட்டணி வைக்காதீர்கள். 

உங்கள் கட்சியில் ஹிந்து மதத்தை கேலி, கிண்டல் செய்து அதன் புனிதத்தை கெடுப்பவர்களை உங்கள் கட்சியைவிட்டே தூக்குவேன் என்று உறுதியளியுங்கள், ஹிந்து மதத்தை மட்டுமல்ல யார் எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் தூக்கி எறியுங்கள், எங்களுக்கு இன்னொரு ஆசை தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி உங்கள் இதயத்திலும்  ஹிந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்