கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் .. பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு.. துண்டாக சிக்கிய வாலிபருக்கு சரமாரி அடி உதை.

Published : Mar 15, 2021, 10:24 AM ISTUpdated : Mar 15, 2021, 10:26 AM IST
கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் .. பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு..  துண்டாக சிக்கிய வாலிபருக்கு சரமாரி அடி உதை.

சுருக்கம்

அதை தொடர்ந்து அவரது பாதுகாப்புக்காக நின்றவர்கள் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கினர். இச்சம்பவத்தை அடுத்து கமல்ஹாசன் வேக வேகமாக தனது ஓட்டல் அறைக்கு புறப்பட்டார். 

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்திய நபரை பொது மக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அக்காட்சி தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மையம் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காஞ்சிபுரத்தின் காந்தி ரோடு பகுதியில் பரப்புரை முடித்துக்கொண்டு கமலஹாசன் புறப்பட்டார். அப்போது திடீரென பிரச்சார கூட்டத்திற்குள் புகுந்து வாலிபர் ஒருவர், கமல்ஹாசனின் காரை வழிமறித்தார். அதனையடுத்து கமல்ஹாசனுக்கு பாதுகாப்பாக நின்ற பவுன்சர்கள் அந்த வாலிபரை தடுத்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் அந்த வாலிபர் திமிறிக்கொண்டு கமல்ஹாசனின் கார் மீது ஏறி, அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். அதில் கண்ணாடி சேதமடைந்தது. 

அதை தொடர்ந்து அவரது பாதுகாப்புக்காக நின்றவர்கள் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கினர். இச்சம்பவத்தை அடுத்து கமல்ஹாசன் வேக வேகமாக தனது ஓட்டல் அறைக்கு புறப்பட்டார். அதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மக்கள் நீதி மையம் தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்ட அந்த வாலிபரை சரமாரியாக அடித்து தாக்கினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் படுகாயமடைந்தார். அதனையத்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த வாலிபர் யார் எதற்காக கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்தினார், என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கமல்ஹாசன் கார் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!