தாங்க மாட்டீங்க... இந்துக்கள் எங்களுக்கு கொசு மாதிரி... கிறிஸ்தவ பாதிரியார் ஆணவப்பேச்சு..!

Published : Oct 06, 2021, 10:49 AM ISTUpdated : Oct 06, 2021, 10:52 AM IST
தாங்க மாட்டீங்க... இந்துக்கள் எங்களுக்கு கொசு மாதிரி... கிறிஸ்தவ பாதிரியார் ஆணவப்பேச்சு..!

சுருக்கம்

இந்தியவினுடைய தேசிய பறவை மயில். அது மைனாரிட்டி தான். ஆனால் கொசுதான் மெஜாரிட்டியா இருக்கு. 

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்ல்மண்டி நடராஜனை தோற்கடித்தவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ்.

 

இதையும் படிங்க...திருமாவளவனை தோலுரித்து காட்டிய ருத்ரதாண்டவம்... வேலூர் இப்ராஹிம் ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

இவர், தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினுடைய கிளைகளை துவங்கி செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து, அதில் முதல் 8 ஆண்டுகள் மறைந்த முதல்வர் கருணாநிதியை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கௌரவப்படுத்தி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள். அடுத்த மூன்று ஆண்டுகள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அழைத்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் அவருக்கு சீட் கொடுத்து திமுக எம்.எல்.ஏ.,வாக வென்றிருக்கிறார். 

 

இந்நிலையில், அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த பாதிரியாரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அவர், ‘’ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி கடந்து செல்ல விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலை தீர்மானிக்க வேண்டும். இந்தியவினுடைய தேசிய பறவை மயில். அது மைனாரிட்டி தான். ஆனால் கொசுதான் மெஜாரிட்டியா இருக்கு. அப்படினா நீ வந்து கொசு எங்களுக்கு. மைனாரிட்டியா இருக்கிற நாங்கள் மயில். அந்த மயில் தோகை விரிச்சா நீ தாங்க மாட்ட’’ எனாவர் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!