5 வருஷம் ஆனாலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாது.. முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த எஸ்.பி வேலுமணி.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2021, 10:05 AM IST
Highlights

முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், மக்கள் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொரோனாவில் இருந்து காப்பாற்றினார். 

ஐந்து வருடங்கள் ஆனாலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி விமர்சித்துள்ளார். விளம்பரத்தால் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தாக்கியுள்ளார். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது, இத்தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில், பன்னியூர் கூட்டுரோடு பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:- 

இதையும் படியுங்கள்:  அடிதூள்.. 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. வாக்களிப்பதில் விறுவிறுப்பு, மக்கள் ஆர்வம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தை தனி மாவட்டமாக அறிவித்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் அடிப்படைத் தேவை என்ன என்பதை அறிந்து தேவைகளை நிறைவேற்றியது அதிமுக அரசு, அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என்பதைக் செய்து காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை, நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார்கள், ஆனால் அதை செய்யவில்லை, அதன் விளைவாக மூன்று மாணவச் செல்வங்களை நாம் இழந்து இருக்கிறோம்.

இதையும் படியுங்கள்:  அக்டோபர் 8 ஆம் தேதி போராட்டம் நடந்தே தீரும்.. திமிறும் திருமாவளவன்.. முதலமைச்சருக்கு நெருக்கடி.

முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், மக்கள் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொரோனாவில் இருந்து காப்பாற்றினார். அதை பிரதமர் மோடியே பாராட்டினார். ஆனால் இன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, விளம்பரத்தால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடங்கள் ஆனாலும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!