ஜூன் 21 வரை இத்திட்டம் தொடரும்... அறநிலையத்துறை எடுத்த அதிரடி முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 16, 2021, 10:23 AM IST
Highlights

கோயில்களில் தயார் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் விநியோகம் குறித்தும் அறநிலையத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கொரோனா 2வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியதால் தொற்றின் தீவிரம் குறையாமல் அதிகரித்தது. எனவே மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, அதன் பலனாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. 

இருப்பினும் மேலும் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 21ம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த தளர்வுகளில் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை, ஆனால் பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கோயில்களில் தயார் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் விநியோகம் குறித்தும் அறநிலையத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினை போக்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரை நாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி ஆணையிடப்பட்டு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது- இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு ஜூன் 21ம் தேதி வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும் நிறைந்த தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!