கோவில்களில் உணவுப்பொட்டலம் தயாரிப்பு... இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 24, 2021, 10:58 AM IST
Highlights

உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் ஊழியர்களுக்கு அறநிலையத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

கொரோனா பெருந்தோற்று காலத்தை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது, ஆனால் வழக்கம் போல் பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் அன்னதானத்திற்கான உணவு தயாரிக்கும் பணிகளும் தொடந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை உணவு பொட்டலங்களாக மாற்றப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் ஊழியர்களுக்கு அறநிலையத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அன்னதான நடைபெறும் திருக்கோயில்களிலிருந்து நாள்தோறும் உணவுப்பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, திருக்கோயில்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் தேவைப்படும் நபர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 இத்துறைப்பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் நலனைக்கருத்தில் கொண்டும், தொற்றுநோய்ப்பரவாமல் தடுக்கும் பொருட்டும், கீழ்கண்ட அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முகவரியில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

1. திருக்கோயில்களில் தயார் நிலையில் உள்ள உணவுப்பொட்டலங்களை திருக்கோயில்களிலிருந்து பெற்று மருத்துவமனைகளில் விநியோகம் செய்யு இணை ஆணையர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப்பெற்று அதன்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2. அன்னதானம் தயார் செய்யும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உணவுப்பொட்டலங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் இத்துறைப்பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினியுடன் PPT KIT வழங்கப்பட்டு அதனை உபயோகிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


3. முதுநிலை திருக்கோயில்களில் அந்தந்த செயல் அலுவலர்களும், இதர திருக்கோயில்களில் மண்டல இணை ஆணையர்களும் மேற்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இச்சுற்றறிக்கை பெற்றுக்கொண்டமைக்கு அத்தாட்சி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!