தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை... அடித்து சொல்லும் தமிழக அமைச்சர்..!

By Thiraviaraj RMFirst Published May 24, 2021, 10:50 AM IST
Highlights

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 140 ரெம்டெசிவர் மருந்து இருப்பில் உள்ளது. இன்னும் கூடுதல் மருந்துகள் மருத்துவமனைக்கு வரவுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில்,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்கள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரானா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொராணா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார். இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 140 ரெம்டெசிவர் மருந்து இருப்பில் உள்ளது. இன்னும் கூடுதல் மருந்துகள் மருத்துவமனைக்கு வரவுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி இருந்தால், அந்த இடத்தில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கடந்த 2 நாட்களாக தேவைக்கு அதிகமாக கையிருப்பில் ஆக்சிஜன் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது எங்கும் இல்லை. திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்கள் விரைவில் தொடங்கப்படும்" என கூறினார்.

click me!