தமிழகத்தின் பால் தாக்கரே... இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்..!

By Thiraviaraj RMFirst Published Sep 30, 2020, 4:54 PM IST
Highlights

இந்து முன்னணி நிறுவனர் 95 வயதான ராம கோபாலன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

இந்து முன்னணி நிறுவனர் 95 வயதான ராம கோபாலன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம கோபாலன் இன்று காலமானார். கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சிகிச்சைப்பெற்று வந்த ராம கோபாலனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக இன்று உயிரிழந்தார்.

. இந்த்துவ இயக்கங்களின் மூத்த தலைவரும், முன்னோடியுமான ராமகோபாலன் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார். ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இவர் தலைமையேற்று நடத்தி வந்தார்.

80-பதுகளில் குமரி மாவட்டம் மண்டைக்காடு மதக் கலவர நிகழ்வுகளின் போது இந்து முன்னணி என்ற  இவரது அமைப்பு பரவலாக கவனம் பெற்றது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரை ஒரு முறை சந்தித்த ராமகோபாலன் அவருக்கு பகவத்கீதை நூலை வழங்க அவரோ ஆசிரியர் வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை பரிசளித்தார். இந்நிகழ்வு அப்போது பெரும் விவாதங்களை உருவாக்கியது. தமிழகத்தின் பால் தாக்கரே என்று வர்ணிக்கப்பட்ட ராமகோபாலன் மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி இறந்தார்.

click me!