இந்தி பேசும் வடநாட்டுக்காரர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்... ராமதாஸ் ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 22, 2020, 12:13 PM IST
Highlights

தமிழ் தெரியாததால் வங்கி கடன் கொடுக்க மறுத்த மேலாளரை உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்!
 

தமிழ் தெரியாததால் வங்கி கடன் கொடுக்க மறுத்த மேலாளரை உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது தந்தை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். ஆனால், அந்த வங்கியின் மேலாளர் தான் வடநாட்டுக்காரர். எனக்கு தமிழ் தெரியாது. எனக்கூறி மொழியை காரணம் காட்டி விரட்டி இருக்கிறார். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதற்காக  ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை!

தமிழ்நாட்டில் வங்கியில் பணியாற்றிக் கொண்டு இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராகக் கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்றத் தகுதியற்றவர். உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்!

மத்திய அரசுத்துறை அலுவலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு  செவிமடுக்காததன் விளைவு தான் இத்தகைய கூத்துகள். இனியாவது நிலைமை மாற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
 

click me!