இமாச்சலபிரதேசத்தில் 37 வருட சாதனையை உடைக்கும் பாஜக! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன ?

By Raghupati RFirst Published Dec 5, 2022, 7:03 PM IST
Highlights

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடந்தது. இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு 74 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்தது.

மொத்தமுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜகவும் காங்கிரஸும் போட்டியிட்ட நிலையில், ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பிஎஸ்பி 53 இடங்களிலும், ராஷ்டிரிய தேவபூமி கட்சி 29 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 11 இடங்களிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியது. இமாச்சல் ஜன் கிராந்தி கட்சி 6 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் போட்டியிட்டது.

இதையும் படிங்க..பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி - கருத்துக்கணிப்பில் புது தகவல் !

வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் ஆட்சி அமைக்க யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை அறிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் இருப்பதைக் காண முடிகிறது. இமாச்சல பிரதேசத்தில் பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி வரும் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றியைப் பெறும் என்று பாஜக நம்புகிறது.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டிவி9 குஜராத்தி , டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் மற்றும் ரிபப்ளிக் டிவி, நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இழுபறியாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு,

நியூஸ்எக்ஸ்: 

பாஜக: 34-40

காங்கிரஸ்: 27-34

ஆம் ஆத்மி: 0

மற்றவை: 1-2

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

டைம்ஸ் நவ்:

பாஜக: 34-42

காங்கிரஸ்: 24-32

ஆம் ஆத்மி: 0

மற்றவை: 1-3

 

ரிபப்ளிக் டிவி:

பாஜக: 34-39

காங்கிரஸ்: 28-33

ஆம் ஆத்மி: 0-1

மற்றவை: 1-4

இந்தியா நியூஸ்:

பாஜக: 32-40

காங்கிரஸ்: 27-34

ஆம் ஆத்மி: 0

மற்றவை: 1-2

 

ஜீ டிசைன்பாக்ஸ்:

பாஜக: 35-40

காங்கிரஸ்: 20-25

ஆம் ஆத்மி: 0-3

மற்றவை: 1-5

 

TV9 பாரத் வர்ஷ்:

பாஜக: 32-34

காங்கிரஸ்: 30-32

ஆம் ஆத்மி: 0

மற்றவை: 3-5

இமாச்சலப் பிரதேசத்தில் 37 ஆண்டுகால வரலாற்று சாதனையை உடைத்து, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்கிறது பாஜக. 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் கட்சி பெரும்பான்மையை பாஜக பெரும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பாஜகவுக்கு கடுமையான போட்டியை அளித்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களுக்கு குறைவாகவே பெரும் என்று தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க.. உங்களுக்கு தைரியம் இருக்கா.? திருமாவளவன் & வேல்முருகனுக்கு சவால் விட்ட பாஜக வேலூர் இப்ராஹிம்.!

click me!