முதல்வர் எடப்பாடிக்கு செக்.... பிள்ளையார் சுழி போட்டு உயர்நீதிமன்றம் அதிரடி..!!

 
Published : Apr 12, 2017, 05:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
முதல்வர் எடப்பாடிக்கு செக்.... பிள்ளையார் சுழி போட்டு உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சுருக்கம்

high court check on edappadi palanisami

நம்பிக்கை  வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டுமென  சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது .

 சட்டசபையில் கடந்த பிப்ரவர் மாதம் 18ஆம் தேதி நடத்திய நம்பிக்கை  வாக்கெடுப்பில் குளறுபடி நடந்துள்ளதாக எதிர்கட்சிகள்  கடும் குற்றம்சாட்டின.இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரி எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின்  உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விதிமுறை மீறப்பட்டாதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டை முன் வைத்தார். இந்த குற்றசாட்டை அடிப்படையாகக்கொண்டு தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து விளக்கம் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தில்  அரசியல் வட்டாரத்தில் பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது  எடப்பாடி மீதும் சிறிய பாய்ச்சல் வருமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது .     

PREV
click me!

Recommended Stories

பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!
ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!