
வரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என சட்டமன்ற துணை சபாநாயகம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் இரு அணிகளும் கலந்து பேசும் காலம் கனிந்துவிட்டது. விரைவில் ஒன்று சேருவோம். அதிமுகவில் பிரிவு ஏற்படவில்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதை திமுகவினர், திரித்து காட்டுகின்றனர்.
தமிழகத்தில் எக்காரணத்தை கொண்டும் இனி குடும்ப ஆட்சி நடக்கவே நடக்காது. குடும்ப ஆட்சி அரசியலுக்கு வராது.
வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் அதிமுகவே பெரும்பான்மையான வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். தற்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியே வரும் காலங்களில் தெடரும். அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.