தமிழ்நாட்டு பாலியல் குற்றங்கள் பட்டியல் இதோ.. திராவிட மாடலை புரட்டி எடுக்கும் அண்ணாமலை.. பரபரப்பு அறிக்கை.

Published : May 11, 2022, 06:39 PM ISTUpdated : May 11, 2022, 06:42 PM IST
தமிழ்நாட்டு பாலியல் குற்றங்கள் பட்டியல் இதோ.. திராவிட மாடலை புரட்டி எடுக்கும் அண்ணாமலை.. பரபரப்பு அறிக்கை.

சுருக்கம்

தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை தமிழகத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது என பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை தமிழகத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது என பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது பற்றி சிறிதும் கவலைப்படாமல் நான் தான் நம்பர் ஓன் முதல்வர் என்று தமிழக முதல்வர் தன்னைத்தானே பாரட்டிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டாகக் குற்றங்களே நடைபெறவில்லை என்று சட்டமன்றத்தில் பேசினால் போதுமா? அறிவாலயம் திமுக அறிவிப்பு ஆட்சி தனக்குத் தானே ஒரு சிறந்த ஆட்சி அறிவிப்பு தருகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளில் சாம்பிளுக்காக ஒரு சில மட்டும்…

02-05-2022 அன்று •திருப்பூரில் 10 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளி 
•சென்னை டி நகரில் 14 வயது சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த 2 நபர் 
•நாமக்கல்லில் தாய் , மகனை கட்டிப்போட்டு 10 வயது சிறுமியை கடத்திய முகமூடி கும்பல் 
•நீலகிரியில் 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர் 
•சென்னையில் அரசு பள்ளியின் அலட்சியத்தால் 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு 

03-05-2022 அன்று •சேலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது 
•மதுரவாயலில் சிறுமியை கர்பம் ஆக்கிய வாலிபர் போக்சோவில் கைது 
•திருவண்ணாமலையில் மதம் மாற மறுத்த கிராம மக்கள் - பொது வழியை மூடி சுவர் எழுப்பிய தேவாலயம் 
•கோவையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் வழிப்பறி செய்த இருவர் கைது •கோவை அரசு பள்ளி மாணவர்கள் மோதல் - கத்திக்குத்து 

04-05-2022 அன்று • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் 
• திருவண்ணாமலையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் 
• அரியலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் 
• நெல்லையில் பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை 
• சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் அடித்துக் கொலை 

09-05-2022 அன்று 
•நாகப்பட்டினத்தில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் 
•சென்னை சேத்துப்பட்டில் 8 வயது சிறுமையை கழிப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் 
•நெல்லை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் 
•சென்னை மயிலாப்பூரில் கணவன் மனைவியை கொன்று 5 கோடி மதிப்புள்ள நகை பொருட்கள் திருட்டு

10/05/2022 அன்று • கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 31 வயது காஜா உசைன் என்பவர் 
•திண்டிவனத்தில் இருளர் இன மாணவரை தீயில் தள்ளி விட்ட இளைஞர்கள் மகளிருக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மட்டுமே மேலே சொல்லப்பட்டுள்ளன. 

இது தவிர சட்டம் ஒழுக்கு கொலை கொள்ளை என்று தமிழகம் அதகளப்படுகிறது. தமிழக அரசுக்கு, கீழ்க்கண்ட முக்கியமான பல பிரச்சனைகள் இருக்கின்றன.அதீனங்கள் காவடியில் போகலாமா வேண்டாமா? மதுரை மருத்துவக்கல்லூரி டீனை சமஸ்கிருத வார்த்தையைச் சொல்லக் கேட்டார் என்ற காரனம் காட்டி நீக்கலாமா? வேண்டாமா? சட்ட மன்றத்தை மகாபலிபுரம் மாற்றினால் எத்தனை லாபம் வரும்?
இரயில் மூலம் மத்திய அரசு அனுப்பும் நிலக்கரிகளை ஒளித்து வைத்து நிலக்கரியே இல்லை என எப்படி மக்களை ஏமாற்றலாம்.
அயோத்தியா மடம் போல கைப்பற்ற இன்னம் மடங்கள் இருக்கிறதா? என்ற ரீதியில் பல கவலைகள் இருப்பதால், முதல்வர் அவர்களால் சட்டம் ஒழுங்கைப் பற்றி கவலைப்பட நேரம் இல்லை. 

அதே நேரத்தில்,பெண்களுக்கு தருவதாகச் சொன்ன மாதாமாதம் உரிமைத் தொகை என்ன ஆச்சு? தங்க நகைக்கடன் தள்ளுபடி வழங்குவது என்ன ஆச்சு? பெட்ரோல் விலை குறைப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு? மக்களை ஏமாற்றிய, பொங்கல் இலவசப் பொருளில் ஊழல் செய்தவர்களை கண்டு பிடித்து விட்டீர்களா? மாற்றுக் கட்சியினர் மேல் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தி, செய்தி, வெளியிட்டது போதுமா? வழக்கு பதிய மாட்டீர்களா? ஏழை வணிகர்கள் ஏராளமாக இருக்க லூலூ எதற்கு? மயிலையில் குடியிருப்புக்களை தகுந்த முன் அனுமதியின்றி அகற்றி, வீடுகளைத் தரைமட்டமாக்கி சாதனை… ஒரு அப்பாவி உயிர் போனது. பணம் தந்தால் உங்கள் தவறால் போன உயிர் திரும்புமா?

இது மட்டுமில்லாது மக்களை அச்சுறுத்தி வாயை மூட வைக்க நடத்தப்படும், லாக் அப் மரணங்கள்.இப்படி எல்லாம் மக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக திசைதிருப்பும்…,பொய்களை நாகூசாது சொல்லும்…, நவீன திராவிட மாடல் ஆட்சி நல்லபடி நடக்கிறது. சமூக ஊடகத்தில் எதிர்த்து யாராவது பேசினால் கைது… பத்திரிக்கைகளிக்கு விளம்பர போனஸ் கட்சித்தரப்பிலிருந்தும், அரசுத்தரப்பிலிருந்தும். ஆக பாவப்பட்டவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் வாக்களித்து வாடிநிற்கும் தமிழர்களே. மகளிருக்கும் குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பாஜக மக்களை ஒன்றுதிரட்டும், வீதிக்கு வந்து போராடும் என்பதை அரசுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் தெரிவிக்கிறேன்.
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!