வாரிசுகள் அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து... மோடி வேதனை..!

Published : Jan 13, 2021, 10:45 AM IST
வாரிசுகள் அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து... மோடி வேதனை..!

சுருக்கம்

தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.  

அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார். தேசத்தை முன்னிலைப்படுத்தாமல் குடும்ப அரசியல் சுயநலத்தையே முன்னிலைப்படுத்துவதாகவும், இத்தகைய அரசியல் வாரிசுகள் சட்டத்தை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் சூழலில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என  கேட்டுக் கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!