"அவன் என் லவ்வர் டி ".... ஒரு மாணவனுக்காக நடு ரோட்டில் அடித்துக் கொண்ட பள்ளி மாணவிகள்..!

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2021, 7:00 PM IST
Highlights

ஒரு கட்டத்தில் அந்த மாணவிகள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிறுமிகள் மாணவிகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். 

ஆந்திர மாநிலத்தில் ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவன் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்துவந்த நிலையில் இந்த மோதல் நடந்துள்ளது. ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொண்ட காலம் போய், இப்போது ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும்  காலம் ஆகிவிட்டது என பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் கற்காமலயே இயற்கையாக தோன்றும் ஒரு உன்னத உணர்வு வருமென்றால் அதை காதல் என்று கூறலாம். அந்த உணர்வுக்கு மயங்காதவர்கள் எவருமே இல்லை என்றே சொல்லலாம். காதல் ஒவ்வொரு காலத்திற்கு ஒரு மாதிரியாக விமர்சிக்கப்படுகிறது. அந்த காலத்து காதல்.. இந்த காலத்து காதல் என எப்போதும் காதல் மனிதகுலத்தின் பரிமாண வளர்ச்சியின் அகக்குறியீடாகவே உள்ளது. எந்த காலத்து காதலாக இருந்தாலும் சரி, அது உண்மையான காதலாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம் காதல் என்பதுதான் பலரின் விருப்பம், விமர்சனம். பார்த்தவுடன் வருவதுதான் காதல்.. சிலருக்கு பார்க்க பார்க்க வருவது தான் காதல், என காதலைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளது. காதல் என்பது மாயை, காதல் என்பது இனம்புரியாத உணர்வு, வரையறுக்க முடியாத ஒரு சுகம், காதல் என்பது ஒரு நாடகம் என்று காதலைக் குறித்து  பலரிடம் பல கருத்துக்கள் உள்ளது.

அழகை பார்த்து வருவதல்ல காதல்,  மனதைப் பார்த்து வருவதுதான் காதல். இல்லையில்லை காதல் பெரும்பாலும் அழகை பார்த்து தான் வருகிறது என்றும் அதை வைத்து பெரிய பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு காதல் பெரும் பேசுபொருளாகவும், முக்காலத்திற்கும் விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் யாரையும் குறை சொல்லவோ.. அல்லது நான் காதலிக்கவே இல்லை என்று எவரும்சொல்லவோ முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாவது காதல் வந்துபோயிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண் என இறைவன் படைத்தான். அதில் காதலை இருவருக்கும் பொதுவில் வைத்தான் என எங்கும் எவரிடமும் எப்போதும் வியாபித்திருக்கிறது காதல்...

அப்படிப்பட்ட  காதல் ஒரு மனிதனை  எப்படி வேண்டுமானாலும் மாற்ற வல்லதாக இருக்கிறது. அந்தபடிதான் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட ஒரு முக்கோண காதல். இரு மாணவிகளை முக்கில் குடுமிப்பிடி சண்டை போட வைத்திருக்கிறது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் ஹாட் டாபிக்காகவும் மாறியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம். அனகாபள்ளி பகுதியை சேர்ந்த மாணவன் வெவ்வேறு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதற்காக விசாகப்பட்டினம் ஆர்டிசி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அதில் 2 பள்ளி மாணவிகள் ஏதோ ஒரு விஷயத்துக்காக  மாறி மாறி வாதிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு அருகில் ஒரு பள்ளி மாணவன் நின்றுகொண்டிருந்தான். அந்த பெண்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றவே சுற்றி இருந்த சக மாணவர்கள் அங்கு என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த மாணவிகள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிறுமிகள் மாணவிகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. காதல் விவகாரத்தில் அவர்கள் மோதிக்கொள்வது அறிந்து பலரும் தலையில் அடித்துக்கொண்டதுடன், உடனே பேருந்து நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் 2 மாணவிகளையும் அந்தப் பள்ளி மாணவனையும், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதுதான் அங்கு நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம் அனகாபள்ளி பகுதியை சேர்ந்த அந்த மாணவன் ஒரே நேரத்தில் வெவ்வேறு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இந்த 2 மாணவிகளையும் காதலித்து வந்தது தெரியந்தது. அப்போது அந்த மாணவன் காதலி ஒருவருடன் சாலையில் நடந்து செல்வதை பார்த்த மற்றொரு காதலி அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாகமாறியதும் தெரியவந்தது. 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொள்ளும் காலம் போய், ஒரு இளைஞனுக்காக இரண்டு மாணவிகள் அடித்துக் கொள்கிறீர்களா? என கேட்டு தலையிலடித்துக் கொண்டதுடன், பொது இடத்தில் இனி இப்படி நடந்து கொள்ளக் கூடாது என அட்வைஸ் செய்ததுடன், அந்த  படிக்கும் வயதில் காதலா எனஅந்த மாணவனையும் கண்டித்து அனுப்பி வைத்தனர். இந்த மோதல் நடந்தபோது வீடியோ எடுத்த  சிலர் அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. 
 

click me!