தமிழக மக்களுக்கு குட் நியூஸ்... ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்..

Published : Dec 23, 2021, 06:10 PM ISTUpdated : Dec 23, 2021, 06:17 PM IST
தமிழக மக்களுக்கு  குட் நியூஸ்... ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்..

சுருக்கம்

உலக முழுவதும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி இருப்பினும் தமிழகத்தில் போதிய மருத்துவ கட்டமைபுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். 

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பழக்கூடை வழங்கி நலம் விசாரித்தார். ஒமிக்ரான் பரவல்  கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஆலோசனை நடத்திய நிலையில் நாளை தமிழக  முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.  பின்னர் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால்  பாதிக்கப்பட்ட முதல் நபரான நைஜிரியாவில் இந்த வந்தவரும் அவரது குடுப்பத்தை சேர்ந்த இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழக் கூடை வழங்கி நலம் விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் முதல் ஒமிக்ரான் தொற்றுக்குள்ளான நைஜிரியாவில் இருந்து வந்தவர், அவர் சகோதரி மற்றும் சகோதரி மகள் பாதிக்கப்பட்டு இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர், 

3 பேர் குணமடைந்ததில் மகிழ்ச்சி,  அவர்களை நலம் விசாரித்தேன் லேசான பாதிப்பு இருப்பதாக கூறினர், இவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அவர் குடும்பத்தை சேர்ந்த மீதம் உள்ள 5 நபர்கள்  நாளை குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். தமிழகத்தில்  ஒமிக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெறுபவர்கள்  எண்ணிக்கை 31 ஆக குறைந்தது என்றார். மத்திய சுகாதாரத்துறை சார்பாக நாடுமுழுவதும் உள்ள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஒமிக்ரான் பரவல் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.

திடீர் என்று இன்று ஒரே நாளில் 33 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற அமைச்சர் கடந்த 20 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறிந்தவர்களின் முடிவுகளை தான் தற்போது மத்திய அரசு ஆய்வகம் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராணிப்பேட்டை திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் தடுப்புசி போடுவது குறைவாக இருப்பதால் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம், இந்த வாரம் மயிலாடுதுறை சென்று அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்  என்றார். மேலும் தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாம் தடுவனை தடுப்பூசி செலுத்தி கொள்ள வில்லை எனவும்  வரும் வாரமும் அடுத்த வாரமும் ஞாயிற்றுகிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றார். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அப்போது கூறினார்.

அனைத்து விழா கொண்டாட்டங்களிலும் தனி மனித கட்டுப்பாடு அவசியம் ஒமிக்ரான் உடல் ரிதியான பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய் பரவல் அதிகமாக உள்ளது,  எந்த விழா கொண்டாட்டமாக இருந்தாலும் சுய கட்டுப்பாட்டை மக்கள் விதித்துக்கொள்ள வேண்டும் என்றார். உலக முழுவதும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி இருப்பினும் தமிழகத்தில் போதிய மருத்துவ கட்டமைபுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். 

முன்னதாக இன்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து பேசிய செயலாளர் ராதாகிருஷ்ணன் பூஸ்டர் டோஸ்  போடுவது குறித்து வலியுறுத்தி உள்ளதாகவும்.  18 வயதிற்கு குறைவான வர்களுக்கு  தடுப்பூசி செலுத்த தயாரா இருப்பதாகவும் மத்திய அரசு வழங்கி வரும் மனவள ஆதரவக்  மார்ச் 31  தேதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கு. ஆர்.டி.பி.ஆர் பரிசோதனை ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.மேலும் 10% மேல் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு  நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மருத்துவ கட்டமைப்புகளை உயர்தி கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு கூறி இருப்பதாகவும் தமிழகத்தில் முன்கூட்டியே இந்த ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அப்போதி தெரிவித்தார்.
 
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!