அவரு ஒழுக்கமான அரசியல்வாதி கிடையாது! இவரோட பேச்சு செம காமெடி: யார், யார் சொல்லியது?

First Published Feb 9, 2018, 11:34 AM IST
Highlights
He does not have a decent politician His talk is comedy Who who said


உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

*    தினகரன் ஒழுக்கமான அரசியல்வாதி கிடையாது. தன்னுடன் இருக்கும் 18 பேரும் ஓடிப்போய்விட கூடாது என்பதற்காக ஏதேதோ பொய் சொல்லி ஏமாற்றுகிறார். அவர் அரசியல் ஏமாற்று வித்தகர்.
-    முனுசாமி

*    மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அறிவித்த எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை.
-    நாராயணசாமி

*    தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, இந்த அரசு எப்போது கவிழும் என்பதுதான். இந்த ஆண்டு இறுதியில் லோக்சபா தேர்தலோடு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
-    ராமதாஸ்

*    தே.மு.தி.க. மாவட்டம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகள் தங்கள் எதிர்மறையான கருத்துக்களையும், குறைகளையும் தலைமை சார்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
-    விஜயகாந்த்

*    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தால் மேல் முறையீட்டிற்கு செல்லமாட்டோம். இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்துவோம், பதினெட்டு பேரும் வெற்றி பெறுவோம். இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்கும் சவாலாக விடுகிறேன்.
-    தங்க தமிழ்செல்வன்.

*    அம்மாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஏன் பன்னீர்செல்வத்தையும், முதல்வர் பழனிசாமியையும் விசாரணைக்கு அழைக்கவில்லை? இந்த ஆணையம் எங்களை மட்டுமே குறி வைக்கிறது.
-    பெங்களூரு புகழேந்தி

*    முன்னுக்குப் பின் முரணாக பேசுவதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் போக்கு. அவருடைய பேச்சுக்களை எல்லோரும் கிண்டல், கேலி நையாண்டியாகத்தான் பார்ப்பார்கள்.
-    வைகை செல்வன்

*    நான்  மட்டுமல்ல பி.ஜே.பி.யின் பெரும்பாலான எம்.பி.க்கள், மத்தியில் நடக்கும் ஆட்சி தனி மனிதரின் ஆட்சியாகத்தான் பார்க்கின்றனர்.
-    சத்ருக்கன் சின்ஹா

*    தினகரன் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அவர், கட்சியில் உரிமை மற்றும் சின்னத்தை கோருவது வேடிக்கையானது.
-    சி.வி.சண்முகம்.

*    மத்திய அரசை நான் விமர்சித்தாலும் கட்சியை விட்டு விலகமாட்டேன். அவர்களாக விலக்கினால், எதிர்த்து கேள்வி கேட்க மாட்டேன்.
-    யஷ்வந்த் சின்ன்ஹா.

click me!