ஜீயரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹெச்.ராஜாவின் அந்த ஒரு வார்த்தை!

First Published Feb 9, 2018, 11:17 AM IST
Highlights
H.Raja who insisted on the Jeeyar


கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஸ்ரீவில்லி. ஜீயரிடம், உண்ணாவிரதத்தை கைவிடக் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், ஸ்ரீவில்லி. ஜீயர் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் சந்நதியில் வந்து நேரில் மன்னிப்பு கேட்க வேண்டு என்று, சடகோபராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று தொடங்கிய அவரது உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை என்று ஜீயரிடம் வலியுறுத்தியுள்ளார். உண்ணாவிரதம் இருந்து வரும் ஜீயரை, ஹெச்.ராஜா இன்று சந்தித்தார். இதன் பிறகு அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை என்று ஜீயரிடம் கூறியுள்ளேன். நாளிதழ் ஒன்றில் வைரமுத்து எழுதிய 13 கட்டுரைகளும் சனாதன தர்மத்துக்கு எதிரானது. கட்டுரைகளில் முதலில் பெருமைகளைப் பேசிவிட்டு கடைசியில் ஒருவரை இகழ்வது வைரமுத்துவின் பாணி.

ஆண்டாள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று இண்டியானா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திருவள்ளுவர் மோட்சம் பற்றி பேசவில்லை என வைரமுத்து எழுதியது தவறானது. தமிழ் தாத்தா உ.வே.சா. பற்றியும் வைரமுத்து தவறான கருத்துகளைத் தனது சுட்டுரையில் தெரிவித்திருந்தார். பொய்யான, சந்தேகமான விதைகளை அவர் துவுகிறார். வைரமுத்துவின் மேற்கோளுக்கு ஆதாரமில்லை என்றார். உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று ஜீயரிடம் கூறியுள்ளேன். அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

click me!