ஒரே கையெழுத்தில் 10 லட்சம் பெண்களின் தலைவிதியையோ மாற்றிவிட்டார்.. கொண்டாடும் ஜோதிமணி.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2021, 10:47 AM IST
Highlights

இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார், அதில், என் போன்ற எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத,ஒரு சாதாரண குக்கிராமத்தில், எளிய  விவசாயக் குடும்பத்தில், தனியொரு பெண்ணால் வளர்க்கப்பட்ட ஒரு பெண், இன்று  நாடாளுமன்றத்தில் கோலாய்ச்ச முடிகிறதென்றால், அதற்கு தலைவர் ராஜீவ்காந்தியின் வரலாற்றுச் சாதனையே காரணம். 

என்போன்ற எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத,ஒரு சாதாரண குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் இன்று  நாடாளுமன்றத்தில் கோலோச்ச முடிகிறதென்றால் அதற்கு தலைவர் ராஜீவ்காந்தியின் வரலாற்றுச் சாதனையே காரணம் என ஜோதிமணி எம்.பி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று அவரின் 77 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் குலாம்நபி ஆசாத் ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார், அதில், என் போன்ற எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத, ஒரு சாதாரண குக்கிராமத்தில், எளிய  விவசாயக் குடும்பத்தில், தனியொரு பெண்ணால் வளர்க்கப்பட்ட ஒரு பெண், இன்று  நாடாளுமன்றத்தில் கோலாய்ச்ச முடிகிறதென்றால், அதற்கு தலைவர் ராஜீவ்காந்தியின் வரலாற்றுச் சாதனையே காரணம். ஆண்களின் உலகம் என்று, இன்றுவரை உலகளவில், உறுதியோடு  நம்பப்படுகிற அரசியலில், பெண்கள் சாதிக்க முடியும் என்று நம்பியவர் ராஜீவ்காந்தி. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளித்து சரித்திரம் படைத்த வரலாற்று நாயகன்.

உள்ளாட்சி அமைப்புகளில் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு தான் என்போன்ற எளிய பெண்களின் தலையெழுத்தை மாற்றி சரித்திரம் படைத்தது. ஒரே ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் ஒரே நேரத்தில் 10 லட்சம் பெண்களை அரசியலில் அதிகாரப்படுத்திய வரலாற்று நாயகன் ராஜீவ்காந்தி. எமது தலைவரை நன்றியோடு
வணங்குகிறேன். 

click me!