அவர் எனக்குத்தான் சொந்தம்.! ஹரி நாடாருக்காக குடுமிபிடியில் இரு மனைவிகள்.. போலீஸுக்கு போன பஞ்சாயத்து.!

By Asianet TamilFirst Published Jan 23, 2022, 7:20 PM IST
Highlights

 "பெங்களூர் சிறையில் ஹரியை நான் பார்க்க சென்றபோது என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, மஞ்சுவிடம் இருந்து என் கணவர் ஹரியை பிரித்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும்” 

தன்னை ஹரி நாடாரின் மனைவி என்று சொல்லிக்கொள்ளும் மலேசியா பெண் மஞ்சுவிடமிருந்து தன் கணவரை மீட்க வேண்டும் ஹரி நாடாரின் மனைவி ஷாலினி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
தமிழகத்தின் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் ஹரி நாடார், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ளார். கடந்த 8 மாதங்களாக சிறையில் இருக்கும் அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமியைக் கண்டித்து வீடியோ ஒன்றை ஹரி நாடார் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜலட்சுமி ஹரி நாடார் மீது புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ஹரி நாடாரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே ஹரி நாடார் ஒருங்கிணைப்பாளராக இருந்த பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ஹரி நாடாரை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்பவர் யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “ எனக்கும் ஹரி நாடாருக்கும் சட்டப்படி திருமணம் ஆகவில்லை. ஆனால் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. சிறையிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு முதல் மனைவியை (ஷாலினி) விவகாரத்து செய்ய வேண்டும் என்றுதான் இருக்கிறார். விரைவில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இங்கு நான் மனைவி என்று என்னை குறிப்பிட காரணம், எங்களுக்குக் குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயெ என்னை மனைவி என்று ஹரி நாடார் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்தில்கூட அவருடைய மனைவி என்று என்னைத்தான் கையெழுத்திட அழைத்தார்கள். ஹரி நாடாரின் வாழ்க்கையில் நான் இருக்கிறேன். அது எல்லோருக்கும் தெரியும்..” என்று தெரிவித்திருந்தார்,

மேலும், “ஹரி நாடார் வெளியே இருந்தவரை ஷாலினி எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. ஹரி நாடார் என்கூடத்தான் இருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். அப்போது புகார் கொடுத்திருக்கலாமே. ஹரி நாடார் மீது பிறகு ஏன் புகார் கொடுக்கணும். அரெஸ்ட் பண்ணனும் ஏன் சொல்லணும்? எஸ்.பி. வரைக்கும் ஏன் போகணும், சோஷியல் மீடியாவில் என் தவறாக எழுதணும்? ஹரி நாடார் வெளியே இருந்தபோது அவரிடமே தைரியமாகப் பேசியிருக்கலாமே. தன்னை ஓர் அனாதைன்னு சொல்லிதான் ஹரி நாடாரை திருமணம் செய்தார். ஆனால், பிறகு அவர் அனாதை இல்லைன்னு தெரிய வருகிறது. அது ஒரு பெரிய கேள்விக்குறி.” என்றும் மஞ்சு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹரி நாடார் எனக்குதான் சொந்தம் என்றும் அவரது முதல் மனைவி ஷாலினி திருநெல்வேலி எஸ்.பி.யிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கடந்த 2012-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்தபோது தனக்கும், ஹரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் சென்னை சென்ற ஹரி நாடார் பைனான்ஸ் தொழிலில் களமிறங்கி கோடி கணக்கில் பணம் சம்பாதித்தார். இதையடுத்து, வசதி வாய்ப்பு வந்ததும் தன்னையும், தன் மகனையும் தனியே தவிக்கவிட்டார். அப்வருக்கும் மலேசியாவை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. 

அதன் பிறகு, மஞ்சு என்னை தொடர்புகொண்டு நான் ஹரி நாடாரின் மனைவி. எங்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. தொடர்ந்து ஹரி நாடாரை நீ மறந்து விட வேண்டும் என்று மிரட்டினார். மஞ்சுவின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டுதான் ஹரி நாடார் விவாகரத்து செய்யபோவதாக தெரிவிக்க, அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். பெங்களூரில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டபோது, அவர் அருகே மஞ்சு இருந்தார். அப்போது, காவல்துறையினர் மஞ்சுவை ஹரி நாடாரின் மனைவி என்று தவறாக எண்ணி கொண்டனர். இதனால், பெங்களூர் சிறையில் ஹரியை நான் பார்க்க சென்றபோது என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, மஞ்சுவிடம் இருந்து என் கணவர் ஹரியை பிரித்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார். ஹரி நாடார் சிறையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் பரபரப்பாகி உள்ளது.

click me!