எதிரி நாட்டு ரேடார்கள், பதுங்குகுழிகளை அழிக்கும் Hawk-i விமான சோதனை வெற்றி. இந்தியா அதிரடிமேல் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2021, 12:38 PM IST
Highlights

அதற்காக பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை புதுப்பிப்பது அதை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.  

தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் வெடிகுண்டு சோதனையை பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் விமானத்தில் இருந்தவாறு வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது எதிரி நாடுகளான பாகிஸ்தான்- சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் எல்லையில் சீனா-பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அத்துமீறல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இந்நிலையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 

அதற்காக பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை புதுப்பிப்பது அதை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தரையில் உள்ள இலக்குகளை விமானத்தில் இருந்தவாறு துல்லியமாக தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் வெடி குண்டு சோதனையை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் வெற்றிகரமாக சோதித்து உள்ளது. ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் ஹாக்-ஐ  என்ற விமானத்தில் இருந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் (டிஆர்டிஓ) அதாவது இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட ஆன்டி ஏர்பீல்ட்  என்றழைக்கப்படும் வெடிகுண்டு வெற்றிகரமாக  ஏவப்பட்டுள்ளது. 

சுமார் 120 கிலோ எடையுள்ள இந்த குண்டு மூலம் 100 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இதை ஏவும் விமானிக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த குண்டை வீச முடியும் என்பது இந்த சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிரி நாடுகளின் விமானப்படைத் தளங்கள், பதுங்கு குழிகள், ரேடார்கள்,மற்றும் விமான பாதைகள் போன்றவைகளை இந்த குண்டு மூலம் நிர்மூலமாக்க முடியும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் டிஆர்டிஓ ஆராய்ச்சி மையமான Imart (RCI) வடிவமைத்துள்ள விமான எதிர்ப்பு ஆயுதம் (SAAW) முற்றிலும்  உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாகும். Hawaki - I MK132 என்ற இந்த போர் விமானத்தில் பொருத்தி பரிசோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்தியன் ஹாக் எம் கே- 132  பயிற்சி விமானத்தில் இருந்து சுடப்பட்ட முதல் ஸ்மார்ட் ஆயுதம் இதுவாகும். ஹாட் எம்கே 132 போர் விமானம் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக  கடந்த 2008 ஆம் ஆண்டில் விமானப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது ஆகும். விமான பயிற்சியில் ஹாக் விமானங்கள் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

click me!