டாஸ்மாக்குக்கு அனுமதி.. சாமிக்கு இல்லையா..? பொங்கி எழுந்த அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2021, 9:51 AM IST
Highlights

அதில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் முக்கியமாக சமுதாய, அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட  தடை தொடர்ந்து  நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ள நிலையில், தொடர்ந்து கோயில்களில் வழிபாட்டுக்கு தடைவிதித்து அதை மூடி வைத்திருப்பதை ஏற்கவே முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் தாக்கம் இன்னும் ஓயவில்லை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என தொடர்ந்து ஐசிஎம்ஆர் எச்சரித்து வருகிறது. இதில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. 

அதில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் முக்கியமாக சமுதாய, அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட  தடை தொடர்ந்து  நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டுதல்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்ற இந்த அறிவிப்பு சிலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது மருத்துவ வல்லுனர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு கூறியுள்ளது.

போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் தடையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதை ஏற்க முடியாது என்றும் டாஸ்மார்க் கடைகள் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து அரசு சாமி தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

click me!