சாராயம் விற்று சம்பாதிக்கும் தமிழக அரசு, சாராயத்தால் இறந்த ஸ்ரீதேவிக்கு செலுத்திய மெகா மரியாதை: போட்டுப் பொளக்கும் பொளேர் விமர்சனங்கள். 

First Published Feb 28, 2018, 6:28 PM IST
Highlights
has paid me to Sridevi who died by Alcohol


துபாயில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். திடீர் மாரடைப்பினால் மரணம்! என்றார்கள். மிகப்பெரிய வருத்தம் வெடித்தது. நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி முதல் அடுத்த வார்டு கவுன்சிலர் வரை அத்தனை தலைவர்களும் கசிந்துருகி அஞ்சலி செலுத்தினார்கள். 

சரி தவறில்லை என்று கடந்து சென்றான் மிஸ்டர் பொதுஜனம். 
ஆனால் மறுநாள் ‘மது போதையால் சுயநினைவிழந்து, பாத் டப் தண்ணீரில் மூழ்கிய விபத்தால் மரணித்தார் ஸ்ரீதேவி.’ என்று துபாயிலிருந்து தகவல் வந்தது. தலையிலடித்துக் கொண்டது பொதுஜனம். ஆனால் அப்போதும் அஞ்சலி செலுத்தலை அடக்கி வாசிக்கவில்லை தலைவர்கள். 

இந்நிலையில் நேற்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் சடலம், இன்று தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்புடன், அவரது உடல் மீது தேசிய கொடியை போர்த்தி மரியாதை தரப்பட்டது. 

இது சர்வதேச அளவில் கோடிக்கணக்கானவர்களை புதிருடன் இந்தியாவை நோக்கி திரும்ப வைத்துள்ளது. 

இது இப்படியிருக்க, தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழக முதல்வர்கள் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சரி போகட்டும், நம் மண்ணில் பிறந்து சர்வதேசத்திலும் ஜனரஞ்சகமான பெண். அதற்காக இந்த இரங்கல் ஓ.கே!தான்.

ஆனால் உச்ச கொடூரமாக, அவர் பிறந்த விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் இன்று அவரது ஸ்ரீதேவியின் உருவப்படத்துக்கு பள்ளிக் குழந்தைகள் மலர் தூவி, மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு, பள்ளியில் சில நிமிடங்கள் மெளன அஞ்சலியும் செலுத்தியுள்ளார்கள். 

ஏன் இந்த ஆர்பாட்டங்கள்?  ஸ்ரீதேவி யார்! நடிகைதானே! சாவித்திரி, அஞ்சலி தேவி, நதியா போல் இழுத்திப் போர்த்திக் கொண்டு நடித்தவரில்லை. அவர் எந்தளவுக்கு இறங்கி நடித்தார்? என்பதை தேசிய விருது பெற்ற ‘பதினாறு வயதினிலே’ படத்தில் அவர் ஆற்றை கடக்கும் காட்சி ஒன்றே போதும். 

தமிழிலேயே இந்த போடு போட்டவர், பாலிவுட் சென்ற பின் ஆற்றிய கலைச்சேவையை சொல்லவா வேண்டும்? அப்பேர்ப்பட்டவரின் பூத உடலுக்கு மத்திய அரசு தேசியக்கொடியை வைத்து மரியாதை செலுத்தியது எந்த வகையில் ஏற்புடையது என்பதே மக்களின் கேள்வி. 

சரி, யோகாசனம் செய்தபோது பிரதமர் டவலாக பயன்படுத்தியதுதானே தேசியக்கொடி. 

சரி, தமிழக அரசு ஏன் பள்ளி மாணவர்கள் இப்படி அஞ்சலி செலுத்த அனுமதித்தது? என்று கேட்டால்...

சாராயத்தை விற்று சம்பாதிக்கும் அரசு, சாராயத்தில் இறந்த ஸ்ரீதேவிக்கு இப்படி அஞ்சலி செலுத்தியதில் ஆச்சரியமுமில்லை, அதிர்ச்சியுமில்லை! என்கிறார்கள் விமர்சகர்கள். 

இது குடிமகன்களுக்கான ராஜ மரியாதை!

click me!