நெய்யில் புரண்ட பெரியவாக்களை, களி விழுங்க வைத்த சங்கரராமன் கொலை வழக்கு: செம்ம ஸ்பீடு ஸ்டோரி!

First Published Feb 28, 2018, 5:08 PM IST
Highlights
Sankara raman murder


சில கொலை வழக்குகள் அரசியல் வட்டாரத்தை உலுக்கும்! சில கொலை வழக்குகள் அதிகார மட்டத்தை உலுக்கும்! இவையெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் ஒரு கொலை வழக்கு ‘ஆன்மிக மடத்தை’ உலுக்குகிறதென்றால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே முடியாது. 
அந்த வகையில் தமிழகத்தில் அப்படி சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் எக்காலத்திலும் மறக்க முடியாத கொலை வழக்கென்றால் அது காஞ்சி கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கும், அதில் ஆச்சாரியார் இருவரும் அரெஸ்ட் ஆன சர்ச்சையும்தான். 

ஒரு முழு நீள க்ரைம் நாவலுக்கு இணையான பரபரப்பை கொண்ட ‘சங்கரராமன் கொலை வழக்கின்’ எக்ஸ்பிரஸ் ஹைலைட்ஸ் பதிவு இது...

*    காஞ்சி மடத்தின் கட்டுப்பாட்டிலடங்கும் வரதராஜபெருமாள் ஆலயத்தின் மேலாளராக இருந்தார் சங்கரராமன்.

*    சங்கரராமனின் அப்பா அனந்தகிருஷ்ணசர்மா, மகா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதியோடு நெருக்கமாய் இருந்தவர். 

*    மகா பெரியவா இறக்கும் வரையில் மடத்தின் பணியாளராக சங்கரராமன் இருந்தார். என்று ஜெயேந்திரர் பீடாதிபதியானாரோ அன்றே அங்கிருந்து விலகி, வரதராஜபெருமாள் ஆலய பணியில் இணைந்தார். இதிலிருந்தே காஞ்சி மட நிர்வாகம் மற்றும் சங்கரராமனிடையே யுத்தம் வெடித்தது. 

*    காஞ்சி பீடாதிபதிகளின் நடவடிக்கை மற்றும் காஞ்சி மடத்தின் செயல்பாடுகள் பற்றி சங்கரராமன் தொடர்ந்து மொட்டை கடிதங்கள் எழுதி வந்ததாக சர்ச்சை எழுந்தது. 

*    இயல்பிலேயே மிக நேர்மையான, தொழில் பக்தியுடைய, பகவானுக்கு பவ்யமான நபராக பார்க்கப்பட்டவர் சங்கரராமன். 

*    கோயிலிடத்தை வாடகைக்கு எடுத்தவர்களிடம் நிலுவை தொகை வசூலிப்பது, ஆலய பூசாரிமார்கள் தில்லுமுல்லு செய்தால் நடவடிக்கை எடுப்பது என்று சங்கரராமன் தெறிக்க விட்டார். 

*    இதற்கெல்லாம் உச்சமாக 2000ல் ஜெயேந்திரர் வெளிநாடு சென்றபோது ‘இந்து மடாதிபதிகள் கடல் தாண்டப்படாது!’ என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சங்கரராமன். இதனால் பெரியவா டிரிப் கேன்சலானது.

*    இந்த மோதலுக்கு பிறகு காமாட்சி அம்மன் ஆலயத்தினுள் நுழைய சங்கரராமனின் குடும்பத்துக்கே தடை விதிக்கப்பட்டது. 

*    இப்படி உரசல், புரசல் ஓடிக் கொண்டிருந்த நிலையில் 2004ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி ஆலய வளாகத்தினுள்ளேயே சங்கரராமன் கொல்லப்பட்டார். ஐந்து நபர்கள் கொண்ட டீம் கூர்மையான ஆயுதங்களால் அவரை சரமாரியாய் போட்டுதள்ளியது. 

*    ஆனால் இந்த குரூர கொலையை கண்ணால் கண்ட சாட்சிகள் யாருமில்லை என்பதுதான் மிகப்பெரிய புதிர். 

*    இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் போக அப்பு என்கிற கிருஷ்ணசாமி எனும் நபர் உள்ளிட்ட பல கைதானார்கள். இந்த அப்பு, தி.மு.க. மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் நெருங்கிய கை என்று தனி கதையாக விமர்சிக்கப்பட்டது. அப்புவை பற்றி மிகப்பெரிய கடத்தல், கொள்ளை, கொலை முயற்சி வழக்கு வரலாற்றை வெளியிட்டது காவல்துறை. 

*    காஞ்சி மடத்தின் கட்டுமானப்பணிகளை செய்த ரவி சுப்பிரமணியன் எனும் சிவில் காண்டிராக்டர்தான் அப்புவை இந்த கொலைக்கு பயன்படுத்தினார் என்று புகார் எழுந்தது. காஞ்சி மடத்தின் மேலாளரான சுந்தரரேச ஐயர்தான் கொலை டீமுக்கான கூலி பணத்தை ஏற்பாடு செய்தார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. 

* 2004 நவம்பர் 11ம் தேதியான தீபாவளி தினத்தில் இந்த வழக்கில் ஜெயேந்திரரை ஆந்திராவில் கைது செய்து, விமானத்தில் சென்னைக்கு அள்ளி வந்தது தமிழ்நாடு போலீஸ். அப்போது இங்கே முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அடுத்து ஜனவரியில் விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டார். கணிசமான காலம் கழித்து ஜாமீன் பெற்றனர். 

*    இந்த கைதை தொடர்ந்து காஞ்சி பீடாதிபதிகள் இருவரின் பர்ஷனல் பக்கங்கள் பற்றியும் எழுந்த விமர்சனங்களை வாசித்தால் கண்கள் கூசும், கேட்டால் காது கருகும். 

*    24 பேர் கைது செய்யப்பட்டு சில வருடங்கள் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்தது. வாய்தாவுக்காக கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் பரபரப்பின் மைய புள்ளியானார்கள் காமகோடிகள். 

*    2013 நவம்பர் 27-ம் தேதியன்று புதுச்சேரி நீதிமன்றம் ‘சரியான சாட்சிகள், ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று அனைவரையும் விடுதலை செய்தது. 

*    இந்த கொலை வழக்கில் காஞ்சி பீடாதிபதிகளை கைது செய்ததன் மூலம் சிறுபான்மை மற்றும் தலித் வாக்கு வங்கியின் பெரிய அங்கத்தை ஜெயலலிதா கைப்பற்றினார் என்று மிகப்பெரிதாய் பேசப்பட்டது. ஜெயலலிதாவால் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது அதை வரவேற்ற கருணாநிதி, தனது ஆட்சி அமைந்தபோது மடாதிபதியுடன் கைகுலுக்கினார் என்று விமர்சிக்கப்பட்டதும் தனி கதை. 

click me!