நண்பேன்டா..!! சிறந்த தலைவரும், விசுவாசமிக்க நண்பருமான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! ட்ரம்ப் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2020, 10:22 AM IST
Highlights

சிறந்த தலைவரும், நம்பிக்கைக்குரிய நண்பருமான பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சிறந்த தலைவரும், நம்பிக்கைக்குரிய நண்பருமான பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்த  நாளை ஒட்டி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மோடியின் 70 வயதை குறிக்கும் வகையில் 70 அடி கேக் வெட்டி பாஜக தொண்டர்கள் பிறந்தநாளை கொண்டாடினர். ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பாஜக தொண்டர்கள் எழுச்சியுடன் கொண்டாடியுள்ளனர். 

சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் மோடியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். சர்வதேச அளவில் மோடியை சமூகவலைதளத்தில் பின்பற்றுபவர்கள் அதிகமென்பதால், பல்வேறு நாட்டு மக்களும் அவருக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோடியின் சிறந்த நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சிறந்த அரசியல் தலைவரும் விசுவாசமிக்க நண்பருமான மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அவர் 70 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பிரதமர் மோடியுடனும், இந்தியாவுடனும் அவர் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். 

அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் ட்ரம்புடன் ஒரே மேடையில் மோடி உரையாற்றினார். அதேபோல் குஜராத் மாநிலத்தில் லட்சக்கண க்கான மக்களை திரட்டி ட்ரம்பை உரையாட வைத்தார் மோடி, அதிலிருந்து ட்ரம்ப்-மோடிக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு வந்தது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் வேகமெடுத்த போது, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ட்ரம்ப் கேட்டதின் பெயரில் உடனே வழங்கி மோடி உதவினார். அதே நேரத்தில் இந்திய எல்லையில் சீனா அத்துமீறி வரும் நிலையில் சீனாவை எதிர்ப்பதுடன், இந்தியாவுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்துக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்துக் கூறி இருப்பது இரு நாட்டுக்கும் இடையே உள்ள உறவை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 

 

click me!