ஸ்டாலினை வெச்சு செஞ்சுட்டார் பொன்முடி: முப்பெரும் விழா முணுமுணுப்பு...

By sathish kFirst Published Sep 19, 2018, 12:41 PM IST
Highlights

தி.மு.க.வின் முப்பெரும் விழா முடிந்து மூணு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அந்த விழாவை பற்றித்தான் அக்கட்சியின் பெருந்தலைகள் மூச்சு திணறப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

‘ஓ! அப்டின்னா அந்தளவுக்கு அந்த விழா வெற்றியா?’ என்று தத்துப்பித்தாக கேள்வி கேட்டீங்கன்னா தாறுமாறாக கோபம் வரும் விழுப்புரம் தி.மு.க. தொண்டர்களுக்கு. 

காரணம்? அதையும் அவங்களே அடுக்குனதை பகிர்றோம் கேட்டுக்குங்க....

*தி.மு.க. துவக்கப்பட்ட நாள், பெரியார்-அண்ணா பிறந்தநாள் என மூன்று பெருமைகளை ஒன்றா இணைத்து திட்டமிட்டப்பட்ட இந்த முப்பெரும் விழாவை நடத்திட தி.மு.க.வுக்குள் பெரும் போட்டி. காரணம் ஸ்டாலின் அக்கட்சி தலைவரான பின் நடக்கும் மிகப்பெரிய விழா அது! என்பதே. எல்லோரையும் விட பொன்முடி ஓவராய் நம்பிக்கை கொடுத்து அனுமதி பெற்றாராம். ஆனால் விழாவை சொத்தையாக நடத்திவிட்டதாக சக நிர்வாகிகளுக்கு கடுப்பாம். 
*விழா ஏற்பாடு மந்தமாக இருக்கவே, கூட்டமும் மாஸாக கூடவில்லை. இதில் ஸ்டாலினுக்கு ஏக வருத்தம். 

*விழுப்புரத்தில் எத்தனையோ இடங்கள் விசாலமாக இருக்க, மிக  குறுகலான நகராட்சி மைதானத்தில் இதை நடத்தினார் பொன்முடி. மேடைக்கு வந்தமர்ந்து, கூட்டத்தைப் பார்த்ததுமே ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் செம்ம  காட்டம். 

*இந்த விழாவுக்காக மாநிலம் முழுவதுமிருந்து வரும் வி.ஐ.பி. நிர்வாகிகள் தங்குவதற்கு கூட பெரிதாக ஏற்பாடுகள் இல்லையாம். சில வி.வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் இரக்கம் காட்டியிருக்கிறார் பொன்முடி. 

*இந்த விழாவுக்காக உட்கட்சி நிர்வாகிகளிடம் நிதி பெறப்பட்டதாம், மொத்த தொகை 2சி-யை தாண்டியிருக்கும் என எல்லோரும் கணக்குப் போட்டிருக்க, முப்பெரும் விழாவுக்கான அனைத்து செலவுகளும் போக மீதிப்பணம் என குறிப்பிட்டு 30-எல் ஐ ஸ்டாலினிடம் ஒப்படைப்பதாக பொன்முடி அறிவித்ததும் விழுப்புரம் நிர்வாகிகள் பலருக்கு தலைசுற்றிவிட்டதாம் டவுட்டில் - ஆக மொத்தத்தில் தலைவரான பின் ஸ்டாலின் பங்கேற்ற இந்த முப்பெரும் விழா பளபளன்னு பட்டாசு கிளப்பியிருக்க வேண்டும். 

ஆனால் பொன்முடியோ ‘வெச்சு செஞ்சுட்டார்’ என்று புலம்பிக் கொட்டுகின்றனர் விழுப்புரம் தி.மு.க.வினர். 
இதெல்லாம் நெசமா பேராசிரியர் பொன்முடியே?

click me!