பாஜகவுடன் இருந்திருந்தால் பாதி இடங்களுக்குமேல் வென்றிருக்கலாம்.? தலையில் அடித்துக் கொள்ளும் தீப்பொறி முருகேசன்

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2022, 11:54 AM IST
Highlights

பாஜகவுடன் சேர்ந்தால் மட்டுமே அதிமுகவுக்கு எதிர்காலம் உள்ளது. சிறுபின்மையினர் வாக்கு என்பது எப்போதும் அதிமுகவுக்கு கிடைக்காது, அது திமுகவுக்கான ஓட்டு.  ஒரு காலத்தில் அப்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். 

பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் நகராட்சி மன்ற தேர்தலில் பாதிக்குமேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என பாஜக தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன் கூறியுள்ளார். மொத்தத்தில் அதிமுகவின் இந்த தோல்விக்கு கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதில் தோல்வி என்பது எதிர்பாராத ஒரு அதிர்ச்சி தோல்வி  என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக என்பது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. ஆனால் அதிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி  அடைந்தோம் என அதிமுகவினர் கூறி வந்தனர். குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கேபி முனுசாமி போன்றோர் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினரின் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றும் பாஜகவை தாக்கி வந்தனர். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது ஏன்? இத்தனை சறுக்கல் ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மொத்தம் தேர்தல் நடந்த 1369 வார்டுகளில் திமுக 952 வார்டுகளிலும் அதிமுக 164 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது திமுக வென்றதில்லை, 50 சதவீத வெற்றியை கூட அதிமுக எட்டவில்லை, அதேபோல் 3 ஆயிரத்து 824 நகராட்சி வார்டுகளில்  2360 இடங்களில் அதிமுகவும் ஆனால் அதிமுக பெரும் 638 இடங்களில் மட்டுமே வென்றது. மொத்தம் 7 ஆயிரத்து 407 பேரூராட்சி வார்டுகளில் திமுக 4388 வார்டுகளிலும் அதிமுக வெறும் 1206 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே போல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வார்டுகளிலும் திமுகவே வென்றுள்ளது. கொங்கு மண்டலத்தின் தளபதியாக கருதப்படும் எஸ்.பி வேலுமணியில் வார்டில் கூட அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கட்சியில் இரட்டை தலைமை நிலவுவதே இந்த தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த அதிர்ச்சியில் உள்ள தொண்டர்களை ஆறுதல் படுத்தும் நடவடிக்கைகளும் ஓபிஎஸ் இபிஎஸ் இறங்கியுள்ளனர். ஆனாலும் இந்த தோல்விக்கு அதிமுகவின் தலைவர்கள் தான் காரணம் என்றும், தொண்டர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளர்களில் ஒருவரான தீப்பொறி முருகேசன், ஆதிமுக தலைமைகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:- மொத்தத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினரின் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காது என்ற முடிவு கட்சித் தலைமைகள் எடுத்த முடிவே தவிர அது தொண்டர்கள் முடிவு அல்ல, பாஜகவுடன் சேராவிட்டால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு விழும் என்று தப்பான கணக்கு போட்டு விட்டனர்.

ஆனால் எப்போதும் சிறுபான்மையினரின் வாக்கு அதிமுகவுக்கு விழுந்ததில்லை, இப்போது அதெல்லாம் மாறி பாஜகவினர் தமிழ்நாட்டின் மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டனர். இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் சிறுபான்மையினரின் வாக்கை மட்டும் நம்பி எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய முடியாது, எல்லாத் தரப்பினரின் வாக்கும் அவசியம்தான். எனவே கட்சித் தலைவர்கள் செய்த தவறினால் தான் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது, இந்த தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்திருந்தால் பாதி இடங்களுக்கு மேல் அதிமுக கைப்பற்றி இருக்கும், இதை எவரும் மறுக்க முடியாது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகலாமா கூடாது என்பதை எந்த தொண்டர்களிடம் தலைமைகள் கேட்கவில்லை. தன்னிச்சையாகவே முடிவெடுத்துக் கொண்டனர். அதற்கான பலனை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவுடன் சேர்ந்தால் மட்டுமே அதிமுகவுக்கு எதிர்காலம் உள்ளது. சிறுபின்மையினர் வாக்கு என்பது எப்போதும் அதிமுகவுக்கு கிடைக்காது, அது திமுகவுக்கான ஓட்டு.  ஒரு காலத்தில் அப்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். தற்போது அந்த சூழ்நிலை மாறிவிட்டது, எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால்தான் அதிமுக வீழ்ச்சியில் இருந்து மீள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.  
 

click me!